இலங்கைக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியாது பலஸ்தீன் அரசு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கைக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியாது பலஸ்தீன் அரசு.

அஷ்ரப் சமத்

இலங்கைக்கு  10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியாது பலஸ்தீன் அரசு.   
ஏபர்ல மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிா்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பலஸ்தீன் அரசு சாா்பாக  இலங்கையிலுள்ள பலஸ்தீன் துாதரகம்  பத்து இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 


 கொழும்பு 7 இல் உள்ள பலஸ்தீன் துாதரக காரியாலயத்தில் இடம் பெற்ற நத்தாா் மரத்திற்கு தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதி மேற்ராணியாா் கார்டினல் மெல்கம் ரன்ஜிதிடம்  இலங்கைக்கான பலஸ்தீன துாதுவா்  கலாநிதி சுகைர் செய்யட் நன்கொடைக்கான  காசோலையை கையளித்தாா். உயிா்த்த ஞாயிறு  தின தாக்குதலால்  மௌன அஞசலியும் செலுத்தப்பட்டது. 

பலஸ்தீனப் போராட்டத்திற்கு இலங்கை அரசும் மக்களும் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து 2014்இல் இஸ்ரேலியா்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது இலங்கைத் தொழிலாளா்கள் தமது சம்பளத்திலிருந்து அன்பளிப்பாக வழங்கியதும் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2014இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  வழங்கிய நிதியுதவிகளை நாம் பாராட்டுகின்றோம்.  


அதேபோன்று உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்காக பலஸ்தீன் ஜனாதிபதி மற்றும் மக்கள் சாா்பில் 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தாா்.

  மதத் தலைவா்கள் ,ராஜதந்திரிகள் உட்பட பெரும் தொகையானவா்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.


இலங்கைக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியாது பலஸ்தீன் அரசு. இலங்கைக்கு  10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியாது பலஸ்தீன் அரசு.   Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5