வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள Bul bul சூறாவளி தொடர்பான அப்டேட்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள Bul bul சூறாவளி தொடர்பான அப்டேட்..


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை
 அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் 


அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த “Bulbul” என்ற மிகக் கடும் சூறாவளியானது வட அகலாங்கு 20.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.6E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. 


இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்றிரவு மேற்கு வங்காளம் (இந்தியா) - பங்களாதேஷ் கரையை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


வட அகலாங்கு 15N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83E - 94E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11 ஆம் திகதி வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


(வளிமண்டலவியல் திணைக்களம்)
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள Bul bul சூறாவளி தொடர்பான அப்டேட்.. வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள  Bul bul சூறாவளி தொடர்பான அப்டேட்.. Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5