வாய்த்தர்க்கம் முற்றியதில், மனைவியின் சகோதரனால் ஒருவர் துப்பாகியால் சுட்டுக் கொலை.


வாய்த்தர்க்கம் முற்றியதில், மனைவியின் சகோதரனால் ஒருவர் துப்பாகியால் சுட்டுக் கொலை.

வெல்லவாய, எதிலிவெவ, மீகஸ்ஆராவ, புபுதுவெவதிவ பகுதியில் இன்று (14) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

வை.ஈ. லால் பிரேமகுமார என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரனால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாய்த்தர்க்கம் முற்றியதில், மனைவியின் சகோதரனால் ஒருவர் துப்பாகியால் சுட்டுக் கொலை. வாய்த்தர்க்கம் முற்றியதில், மனைவியின் சகோதரனால் ஒருவர் துப்பாகியால் சுட்டுக் கொலை. Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.