முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டுகின்ற படலம்



2009ம் ஆண்டு மே மாதத்தோடு என்ட் கார்டு போட்டு முடிவுக்கு வந்த மூன்று
தசாப்த காலத்தைய பயங்கரப்போரின் சாவை தேசமே கொண்டாடிக் கொண்டிருந்தது. அந்த கொண்டாட்டத்தோடு அதே ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்டு 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் அது நடந்து முடிந்தது. 

அந்த நேரத்தில் ஒப்பற்ற ஒரு போர் வீரனாகவும் தேசத்தின் வன் என்ட் ஒன்லி வெரியராகவம் மஹிந்தவை தேசம் தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கூட மூன்று தசாப்த காலத்தைய கொன்ஜேரிங் போரை முடிவுக்கு கொண்டு வந்து மறுபடி சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த மஹிந்தவுக்கு அந்த நேரத்தில் கூட நன்றி செலுத்து முகமாக போரின் தீராத வடுக்களை சுமந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களை, போரினால் இழப்புகளை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாண முஸ்லீம்களை  மஹிந்தவுக்கு வாக்களிக்க விடாமல் கிழக்கு மாகாண மக்களுக்கு அப்போதும் கூட முஸ்லீம் காங்கிரஸ் தலைவரான ரவுப் ஹக்கீம் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயிருந்த யுஎன்பீயின் டிரைவிங்கில் பயணித்த சரத் பொன்சேக்காவுக்கு தனது ஆதரவை தந்து கொண்டிருந்தார். 

தனது பரம்பரை யுஎன்பீ விசுவாசத்துக்காகவும் தனது தனிப்பட்ட லாபங்களுக்காகவும் மிக மோசமான முடிவை அப்போது எடுத்ததோடல்லாமல் கிழக்கு மாகாண முஸ்லிம்களை போரை முடித்துத் தந்த மஹிந்தவுக்கு எதிரானவர்களாக நன்றி கெட்டவர்களாக அப்போது அவர் ஆயிரம் சூரியனோ சந்திரனோ பாட்டை லவுட் ஸ்பீக்கரில் போட்டு மக்களை மடையர்களாக மாற்றிக் கொண்டிருந்தார்.

அவரது போலியான வார்ததைகளுக்கு கட்டுப்பட்டு மக்களும் தம்மை மடையர்கள் மோடுக்கு மாற்றி பெரும்பாலோன கிழக்கு வாழ் முஸ்லீம்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்திருந்தனர். ஆனாலும் மஹிந்த 57.88 வீத வாக்குகளைப் பெற்று பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருந்தார். (மஹிந்த வெற்றியின் பின்னர் அவரது சால்வைக்குள்ளே இதே கூட்டம் போய் ஒளிந்து கொண்டதெல்லாம் பேசப்படாது இங்கே)  

மூன்று தசாப்த காலம் புலிகளினால் அவ்வளவு தூரம் அடிபட்டும் செத்துச் சுண்ணாம்பாகியும் 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீமின் யுஎன்பீ விசுவாசத்தால் கிழக்கு மாகாண முஸ்லீம் காங்கிரஸ் வாலாக்கள் போரை முடித்து ஒரு நிம்மதிப் பெருமூச்சை பெற்றுத் தந்த மஹிந்தவுக்கெதிராகவே வாக்களித்திருந்தனர். 

தவிரவும் போர் வெற்றியின் பின்னணியில் மஹிந்த அப்போது பெருவாரியாக தேர்தலை வெல்லுவார் என்ற சமாச்சாரம் அப்போது வெளிப்படையாகத் தெரிந்திருந்தும் யாரினதோ அஜென்டாவுக்காக ஹக்கீம் யுஎன்பியோடு “கூட்டி”ச் சேர்ந்தார் முழு முஸ்லீம் சமூகத்தையும் பலி பீடத்திலே ஏற்றி. 

ஆனாலும் அவரது வியூகத்துக்குள்ளே விட்டில்களைப் போலவே விழுந்து அப்போது எழ முடியாமல் செத்துப் போயிருந்தது நமது சமூகம். நீ போரை வென்றால் எனன் நாங்கள் ஹக்கீம் காட்டுகின்ற பக்கமே செல்லுவோம் என்ற நம்மவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்ட கதையை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். 

வரலாற்று ரீதியாக எடுத்துப்பார்த்தால் ஹக்கீம் எப்போதுமே தன்னை நம்பியிருக்கின்ற மக்களை கேக்குறவன் கேணையனா இருந்தா எருமை மாடும் ஏரோ ப்ளேன் ஓட்டுமாம் மோடிலேயே வைத்துக் கொண்டிருக்கின்றார். ஹக்கீமைப் பொறுத்த வரை யுஎன்பீ நலன்…..ரணிலின் ஆரோக்கியமே உசிரினும் மேலானது. அவர் கிழக்கு முஸ்லீம்களுக்கான அரசியலை ஒரு போதும் செய்வதில்லை. தனக்கான அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார்.  

வாழ்க முஸ்லீம் அரசியல்….வளர்க சோனக உரிமைகள்.      

கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-11-10
முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டுகின்ற படலம் முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டுகின்ற படலம் Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.