எமது ஆட்சியில் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்பேன் ; ஜோன்ஸ்டன் பகிரங்க அறிவிப்பு .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

எமது ஆட்சியில் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்பேன் ; ஜோன்ஸ்டன் பகிரங்க அறிவிப்பு ..கோத்தாபய ராஜபக்‌ஷ  இனவாதியாக இருந்தால் அவர் சட்டத்தரணி அலி சப்ரியை தனது சட்ட ஆலோசகராக
வைத்திருக்கமாட்டார் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

மாவத்தகம பகுதியில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,

கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்களை இனவாதி என ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள்.அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் எனவும் முஸ்லிம்களிடம் போய் கூறி அவர்களை அச்சமூட்டி அவர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள்.

இன்று இலங்கையில் எவ்வளவோ பிரபல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். இருந்தும் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களை கோத்தாபய ராஜபக்‌ஷ தனது நம்பிக்கைக்குறிய சட்டத்தரணியாக உடன் வைத்துள்ளார்.அவர்களுக்கு இடையேயான உறவு ன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல என்பதை நான் இந்த இடத்தில் சொல்லி வைக்க விரும்புகிறேன்.

இந்த அரசாங்க காலத்தில் 97 தடவைகள் சாஹ்ரான் தொடர்பில் புலனாய்வு தகவல் கிடைத்தும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஹரீனின் தந்தை அவருக்கு கூறிய தகவலை அவர் காதினல் அவர்களுக்கு அறிவித்திருந்தால் கூட இந்த தாக்குதல்களை தடுத்திருக்கலாம்.

குண்டு வெடிக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்த அரசு இப்போது போலியான பரப்புரைகளை செய்து வருகிறது.நாம் ஆட்சிக்கு வந்தால் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நான் பொறுப்பேற்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.


எமது ஆட்சியில் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்பேன் ; ஜோன்ஸ்டன் பகிரங்க அறிவிப்பு .. எமது ஆட்சியில் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்பேன் ; ஜோன்ஸ்டன் பகிரங்க அறிவிப்பு .. Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5