இன்று அபுதாபியில் ஆரம்பமாகும் அபுதாபி டி 10 ... 15 இலங்கை வீரர்களும் களத்தில்.


ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் அபு­தாபி செய்யத் கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மாகும் அபு­தாபி பத்து
10 (டி 10) லீக் கிரிக்கெட் போட்­டியில் எட்டு அணிகள் பங்­கு­பற்­ற­வுள்­ளன. மூன்­றா­வது தட­வை­யாக நடத்­தப்­படும் இப் போட்டி எதிர்­வரும் 24ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதி ஆட்­டத்­துடன்
நிறை­வு­ பெ­ற­வுள்­ளது.


இரண்டு குழுக்­க­ளாக வகுக்­கப்­பட்டு லீக் முறையில் நடத்­தப்­படும் இப் போட்­டியில் ஏ குழுவில் திசர பெரேரா தலை­மை­யி­லான பங்ளா டைகர்ஸ், ஷேன் வொட்சன் தலை­மை­யி­லான டெக்கான் க்ளடி­யேட்டர்ஸ், ஒய்ன் மோர்கன் தலை­மை­யி­லான டெல்ஹி புல்ஸ், ஹஷிம் அம்லா தலை­மை­யி­லான கர்­நா­டகா டஸ்கர்ஸ் ஆகிய அணி­களும் பி குழுவில் யுவ்ராஜ் சிங் தலை­மை­யி­லான மாரத்தா அரே­பியன்ஸ், ஷஹித் அப்­ரிடி தலை­மை­யி­லான குவா­லண்டர்ஸ், டெரன் சமி தலை­மை­யி­லான நொதர்ன் வொரியர்ஸ், மொயீன் அலி தலை­மை­யி­லான டீம் அபு­தாபி ஆகிய அணி­களும் விளை­யா­ட­வுள்­ளன.


திசர பெரேரா (அணித் தலைவர்),ஷெஹான் ஜய­சூ­ரிய, கெவின் கொத்­தி­கொட,மலிந்த புஷ்­ப­கு­மார,உப்புல் தரங்க, நுவன் பிரதீப்,அசேல குண­ரட்ண,பானுக்க ராஜ­பக்ச,துஷ்மந்த சமீர,ஏஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் பெரேரா, லசித் மாலிங்க,தசுன் சானக்க,வனிந்து ஹச­ரங்க,நிரோஷன் திக்­வெல்ல


முதல் சுற்றில் ஒவ்­வொரு குழு­விலும் இடம்­பெறும் அணிகள் லீக் முறையில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தாடும். லீக் சுற்று முடிவில் அணிகள் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்டு இரண்டாம் சுற்றில் மோதும்.



இந்த சுற்­றில ஒரு குழு­வி­லுள்ள அணிகள் மற்­றைய குழுவில் உள்ள அணி­க­ளுடன் விளை­யாடும்.இரண்டாம் சுற்று முடிவில் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் நேரடி அரை இறு­தியில் விளை­யாடும். 3ஆம், 4ஆம் இடங்­களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்­டியில் விளை­யாடும்.
முத­லா­வது அரை இறு­தியில் தோல்வி அடையும் அணியும் நீக்கல் போட்­டியில் வெற்­றி­பெறும் அணியும் இரண்­டா­வது அரை இறு­தியில் மோதும்.இரண்டு அரை இறு­தி­களில் தோல்வி அடையும் அணிகள் 3ஆம் இடத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டி­யிலும் வெற்­றி­பெறும் அணிகள் இறுதிப் போட்­டியில் விளை­யாடும்.


அபு­தாபி பத்து 10 கிரிக்கெட் போட்­டியில் இலங்­கையின் முன்­னனி வீரர்­க­ளான லசித் மாலிங்க, ஏஞ்­சலோ மெத்யூஸ், திசர பெரேரா, குசல் பெரேரா, நிரோஷன் திக்­வெல்ல உட்­பட 15 இலங்கை வீரர்கள் விளை­யா­ட­வுள்­ளனர்.
முன்னாள் இலங்கை வீரர்­க­ளான உப்புல் தரங்க, அசேல குண­ரட்ன மற்றும் இது­வரை இல­ங்கை அணியில் இடம்­பெ­றாத கெவின் கொத்­தி­கொட ஆகி­யோரும் விளை­யா­ட­வுள்­ளனர்.


குவா­லண்டர்ஸ் அணியைத் தவிர்ந்த மற்­றைய அணி­களில் இலங்கை வீரர்கள் இடம்­பெ­று­கின்­றனர்.


இலங்கை வீரர்கள்பங்ளா டைகர்ஸ் – திசர பெரேரா (அணித் தலைவர்), ஷெஹான் ஜய­சூ­ரிய, கெவின் கொத்­தி­கொட.
மாரத்தா அரே­பியன்ஸ் – லசித் மாலிங்க, தசுன் சானக்க, வனிந்து ஹச­ரங்க.டெல்ஹி புல்ஸ் – ஏஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் பெரேரா.டெக்கன் க்ளடி­யேட்டர்ஸ் –  பானுக்க ராஜ­பக்ச.                                         நொதர்ன் வொரியர்ஸ் –  நுவன் பிரதீப், அசேல குண­ரட்ண.                    கர்­நா­டகா டஸ்கர்ஸ் – உப்புல் தரங்க, மலிந்த புஷ்­ப­கு­மார.                    டீம் அபு­தாபி – நிரோஷன் திக்­வெல்ல


போட்டி அட்­ட­வணை


தினமும் 3 போட்­டிகள் நடை­பெ­று­வ­துடன், கடைசி நாளன்று இரண்டு போட்­டிகள் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இன்று நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது போட்­டியில் லசித் மாலிங்க இடம்­பெறும் மாரத்தா அரே­பியன்ஸ் அணியை நுவன் பிரதீப் இடம்­பெறும் நொதர்ன் வொரியர்ஸ் அணி எதிர்த்­தா­ட­வுள்­ளது.

(எம்.எம்.சில்­வெஸ்டர் - மெட்ரோ )
இன்று அபுதாபியில் ஆரம்பமாகும் அபுதாபி டி 10 ... 15 இலங்கை வீரர்களும் களத்தில். இன்று அபுதாபியில் ஆரம்பமாகும் அபுதாபி டி 10 ... 15 இலங்கை வீரர்களும் களத்தில். Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.