நாளைய தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் ஒரே பார்வையில்...


எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில்,

நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 300 பஸ் வண்டிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 300 பஸ் வண்டிகள்  ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. தேர்தர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமையவே இந்த பஸ்வண்டிகள் வழங்கப்படுகின்றன.

வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லல், தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் போக்குவரத்து தேவைகளுக்காக இந்த பஸ்வண்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய குறிப்பிட்ட பஸ்வண்டிகள் நான்கு தினங்களுக்கு தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.

இவ்வாறு தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட இருக்கும் பஸ் வண்டிகளுக்காக, ஒரு பஸ்வண்டிக்கு நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் ரூபா அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து அறவிட இருக்கின்றது என தெரிவிக்கப்படுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 1178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.  அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபறெவுள்ளது. மாலை ஐந்து மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய  வாக்குப் பெட்டிகள்   அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும்  வாக்காளர் எண்ணிக்கைக்கு அமைய  வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்குகளை எணண நாடு முழுவதும் 371 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குருணாகல் மாவட்டத்திலேயே  அதிக தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி  தெரிவு செய்வதற்கான  எட்டாவது ஜனாதிபதி தேர்தலே நாளை நடைபெறவுள்ளது. இந்தத்  தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் ஜனாதிபதியை தெரிவு செய்ய 15992096 வாக்காளர்கள்   பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், அதிகாரிகள் குறைவாகவுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமானது.

நாளை காலை முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கிலும் வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளைய தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் ஒரே பார்வையில்... நாளைய தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள்  ஒரே பார்வையில்... Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.