கிழக்கு மாகாணத்தில் 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 பேர் வாக்களிப்பதற்கு தகுதி !


- ஹஸ்பர் ஏ ஹலீம் -
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 (11,83,205) வாக்காளர்கள் நாளை 16
ஆம் திகதி நடைபெறவுள்ள 08 ஆவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 1258 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 94,781 பேரும் மூதூர் தொகுதியில் 1,07,030 பேரும் சேருவில தொகுதியில் 79,303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் 1,15,974 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் 1,87,672 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதியில் 1,74,421 பேரும் சம்மாந்துறை தொகுதியில் 88,217 பேரும் கல்முனை தொகுதியில் 76,283 பேரும் பொத்துவில் தொகுதியில் 1,64,869 பேரும் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர்.இவர்கள் வாக்களிக்க 523 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளைய தினம்(16) இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விசேட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மூலம் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதை அவதானிக்க முடிகிறது.மேலும் ரோந்து சேவையிலும் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் இணைத்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..



கிழக்கு மாகாணத்தில் 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 பேர் வாக்களிப்பதற்கு தகுதி ! கிழக்கு மாகாணத்தில் 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 பேர் வாக்களிப்பதற்கு தகுதி ! Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.