கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஆனது.. அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .


கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் 
செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த  மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .

நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்த இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டனர்.


கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை தொடர்பான முறையான சான்றிதழை சமர்ப்பிக்காமல் நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.


அதன் காரணமாக குறித்த பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வெளியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனை மூன்று நாட்கள் ஆராய்ந்த பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் தேர்தலுக்கான வேட்புமனுவை வரும் திங்கள் தாக்கல் செய்வார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஆனது.. அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .  கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஆனது.. அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது . Reviewed by Madawala News on October 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.