சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் கிட்டியது . அல்ஹம்துலில்லாஹ்


நூறுள்  ஹுதா உமர்
கடந்ந 18.09.2019 ம் திகதி காணாமல் போன  சாய்ந்தமருது மாளிகைகாடு 
மற்றும் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும் தற்போது திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் கண்டுபிக்கப்பட்டுள்ளது என அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படகு கடற்றொழில் அமைச்சின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு சட்டலைட் ஊடாக இனங்காணப்பட்டதாகவும் தங்காலை தெகுந்துர பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்த மீனவர்கள் படகினையும் மீனவர்களையும் தற்போது கரைக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை ஊருக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மீனவ சங்கங்கள் முன்னேடுத்து வருகின்றன.
சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் கிட்டியது . அல்ஹம்துலில்லாஹ் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் கிட்டியது . அல்ஹம்துலில்லாஹ் Reviewed by Madawala News on October 07, 2019 Rating: 5