கடற்கரையில் உலாவ சென்ற மீராலெப்பை என்ற நபர் அடித்துக் கொலை..


பாறுக் ஷிஹான்-
நிந்தவூரில் கடற்கரையில்  உலாவ  சென்ற வயோதிபரொருவர்
 தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மீராநகர் கடற்கரை பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.


குறித்த சம்பவத்தில் இல 70, வன்னியார் வீதி, நிந்தவூர் பகுதியை சேர்ந்த முகம்மது தம்பி மீராநூர் மீராலெப்பை (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த நபர் மீது தென்னை மரக்குற்றி மூலம் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.


இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான நிலையில் ஜனாஸா வை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டுள்ளதுடன், அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்கரையில் உலாவ சென்ற மீராலெப்பை என்ற நபர் அடித்துக் கொலை.. கடற்கரையில்  உலாவ  சென்ற மீராலெப்பை என்ற நபர் அடித்துக் கொலை.. Reviewed by Madawala News on October 07, 2019 Rating: 5