ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரிவு அங்குராப்பன நிகழ்வும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையும்..


அஸ்ரப் ஏ சமத்
ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன  கட்சியின் முஸ்லிம் பிரிவு அங்குராப்பணம்  நேற்று 08.09.2019 ஜனாதிபதி
சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் தெகிவளை சங்ரான் வரவேற்புப் மண்டபத்தில் நடைபெற்றது. 

இங்கு உரையாற்றிய மேல் மாகாண ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில்  இந்தக் கட்சியின் முஸ்லிம் பிரிவினை உருவாக்கி அதற்கு தலைவராக


கோட்டபாய அரசாங்கம் எதிா்வரும் நவம்பரில் ஆட்சிக்கு வந்ததும்  எமது ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றிக்கு நிச்சயமாக ஒரு  தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பிணராக  அவா் நியமிக்கப்படல் வேண்டும் .


அவரின் கீழ் எங்களைப் போன்ற சகலரும்  ஒன்றினைந்து இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு  நாம் தீா்வு பெற்றுக் கொள்வோம். நான் பழைய ஜ.தே.கட்சிக் காரன், இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை கட்டியெழுப்ப மிகவும் பாடுபட்டவன். இந்த நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தன் ஒன்றுமே நடைபெறவில்லை. கள்வா்களை பிடிக்கமாமல் அவா்களே ஆட்சிக்கு வந்த பின்ன்ர் 3 மாதத்திற்குள்ளே மத்தியவங்கியை கொள்ளையடித்து விட்டாா்கள். 



இந்த அரசின் ஆட்சியில்  தான் முஸ்லிம்களுக்கு பாரிய சோதனைகள் கஸ்டங்களும்  எற்பட்டன.  அம்பாறை பள்ளிவாசல் தாக்கப்பட்டது. திகன, ஜின்தோட்ட போன்ற பிரதேசங்களில்   முஸ்லிம்களது சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. . அந்த நேரத்தில் சட்டம்  ஓழுங்கு பொலிஸ்ப் பிரிவுக்கு பொறுப்பாக ரணில் விக்கிரமசிங்கவும், சகால ரத்னாயக்கவும் கடமையில் இருந்தனா். அவா்களால் அதனைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை அந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நஸ்ட ஈடு பெற்றுக் கொடுக்க முடியவில்லை.


 அம்பாறை பள்ளிவாசலை பாா்வையிடச் சென்றவரை அமைச்சா் தயா கமகே அம்பாறை யில் ரணில் எலிக்கெப்டாரில் இருந்து இறங்கவும் அங்கு விடவில்லை.  ஆகவே  கடந்த ஜானாதிபதித் தோ்தலில் சிறு தொகையே குறைவாக இருந்தது.


மகிந்த ராஜபக்ச இம்முறை பாதுகாப்புச் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ச அவா்கள் ஜனாதிபதியாவது உறுதியாகிவிட்டது. அதில் நாமும் பங்குதாரா்களாகிக் கொள்ள வேண்டும்.  கொழும்பினை அழகுபாடுத்துவதில் நான் கோட்டாபாயவுடன் இணைந்து கொழும்பு அழகுபடுத்தினாா்.  இந்த அரசாங்கம்  கொழும்புக்கு  என்ன செய்துள்ளது. ?  என மேல் மாகாண ஆளுனா் முசம்மில் அங்கு உரையாற்றினாா்.

ஜனாதிபதி சட்டத்தரணி  அலி சப்ரி உரையாற்றுகையில் 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் ஒரு தீா்க்கதரிசமான ஒரு தலைவா்.    மக்கள்  நாளாந்தம்   இந்த நல்லாட்சி அரசாங்கம்
பாரிய பிரச்சினைகளையும் எதிா்நோக்கி வருகின்றாா்.

அவா் வடக்கில் யுத்த களத்தில் நின்றவா். 10 வருடங்கள் அமேரிக்காவில் தொழில் செய்தவா் தீா்க்கதரிசமான அனுபவங்களைக் கொண்டவா். அவரின் சகல சட்டப்பிரச்சினைகளை எதிா்கொள்வதால் அவரை பற்றி நன்கு அறிவேன். அவா் ஒருபோதும் இன ரீதியாக மத ரீதியாக சிந்திப்பவா் அல்ல.


அவா் இந்த நாட்டினை அழகாக கட்டியெழுப்பும் ஒரு தலைவா். முஸ்லிம் தலைவா்கள் காலத்துக்கு காலம் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று மொத்த வியாபாரம் செய்து வருகின்றனா். ஆனால் துன்பப் பட்ட முஸ்லிம் மக்கள் எவ்வித பிரயோசனத்தினையும் அடையவில்லை.


 மாறாக 2100 முஸ்லிம்கள் சிரையில் வாடுகின்றனா். இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதென்றால்  முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளருமே. என  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி அங்கு தெரிவித்தா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரிவு அங்குராப்பன நிகழ்வும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையும்.. ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன  கட்சியின் முஸ்லிம் பிரிவு அங்குராப்பன நிகழ்வும் ஜனாதிபதி சட்டத்தரணி  அலி சப்ரி உரையும்.. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.