சுயநலமற்ற அரசியல் தலைமைகள் வடக்கில் இருந்தும் உருவாக வேண்டும் ; நாமல் ராஜபக்‌ஷ



சுயநலமற்ற முஸ்லிம் தலைமைகள் வடக்கில் இருந்து உருவாக வேண்டும் என பொதுஜன பெரமுன
முக்கியஸ்தரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மன்னார் முசலி பிரதேசத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


சுயனலமற்ற முஸ்லிம் தலைமைகள் வடக்கில் இருந்து உருவாக வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது.கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ  அவர்களின் வழிகாட்டலில் மான்னாரில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

எம்மிடம் அனைத்தை பெற்றுக்கொண்டவர்கள் கொண்டு வந்த அரசு இங்குள்ள மக்களுக்கு ஒன்றையும் செய்யவில்லை.முஸ்லிம் சமூகத்தை நெருக்கடிக்கடிக்குள் தள்ளியதை தவிர முஸ்லிம் சமூகத்திற்கும் ஒருப்படியான ஒன்றையும் அவர்கள் செய்யவில்லை.

சஹ்ரான் தொடர்பில் 97 தடவைகளுக்கு புலனாய்வு பிரிவு தகவல் அளித்தும் இந்த அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு உடையவர்களை பழி தீர்க்கவே பொலிஸாரை இந்த அரசு பயன்படுத்தியது.மாறாக சஹ்ரான் போன்ற தீவிரபோக்குடையவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எமது அணியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறிய ஒருவிடயத்தை தவறாக புரிந்துகொண்டு சஹ்ரானுக்கு நாம் சம்பளம் வழங்கியதாக போலி பிரசாரம் செய்கின்றனர்.சஹ்ரானுக்கு நாம் சம்பளம் வழங்கி வழி நடத்தி இருந்தால் ஏன் எங்களை கைது செய்யவில்லை.

அனைத்து விடயங்களும் நடக்க அனுமதி அளித்துவிட்டு எதிரணி மீது விரல் நீட்டும் இந்த அரசை முஸ்லிம்கள் இனிமேலும் ஆதரிக்க கூடாது.

சுயநல அரசியல் தலைமகளை ஓரம் கட்டிவிட்டு முகவர்கள் தரகர்கள் ஊடாக  எம்மை அனுகாமல் நேரடியாக எமது அரசியல் பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு நாம் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சுயநலமற்ற அரசியல் தலைமைகள் வடக்கில் இருந்தும் உருவாக வேண்டும் ; நாமல் ராஜபக்‌ஷ சுயநலமற்ற   அரசியல் தலைமைகள் வடக்கில் இருந்தும் உருவாக வேண்டும் ; நாமல் ராஜபக்‌ஷ   Reviewed by Madawala News on October 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.