180 கிலோ கஞ்சா கடத்தலை சுட்டுப் பிடித்த கடற்படை...போலீஸ் உத்தியோகத்தரும் கைது.


மன்னாரில் உத்தரவை மீறிச் சென்ற  வாகனம் மீது கடற்படையினர் 
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


குறிப்பிட்ட  ஜீப் இல்  கேரள கஞ்சா கடத்திய இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார், இழுப்பக்கடவாய் வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சுரிய பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள், சொகுசு வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் உத்தரவை மீறி வாகனம் பயணித்துள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் டயர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
உத்தரவை மீறிச் சென்ற சொகுசு ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 180 கிலோ கிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் மெதகம பொலிஸ் நிலையத்தில் சேவை செய்யும் பொலிஸ் அதிகாரி என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பொலிஸ் அதிகாரி குறித்த சந்தர்ப்பத்தில் சீருடையில் இருந்ததாகவும், அவர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.


குறித்த ஜீப் ஒன்றில் 180 கிலோ கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்துள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
180 கிலோ கஞ்சா கடத்தலை சுட்டுப் பிடித்த கடற்படை...போலீஸ் உத்தியோகத்தரும் கைது. 180 கிலோ கஞ்சா கடத்தலை சுட்டுப் பிடித்த கடற்படை...போலீஸ் உத்தியோகத்தரும் கைது. Reviewed by Madawala News on October 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.