மடவளையில் இன்று இடம்பெற்ற "மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகள்" தொடர்பான மாபெரும் விளக்கக் கருத்தரங்கு.


மடவளை பஸார் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த
 மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகள்
தொடர்பான
மாபெரும் விளக்கக் கருத்தரங்குகள் இரண்டு பிரிவுகளாக  இன்று மடவலையில் நடைபெற்றது.

HAC உடைய உலமாக்களை கொண்ட ஒரு விசேட குழு வளவாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு அஷ்ரப் கேட்போர் கூடத்தில் பெண்களுக்கு மாலை 3.45 மணிக்கும்  , ஆண்களுக்கு  இரவு 7.45 மணிக்கும் நடை பெற்றது.

வியாபாரிகளால்  விநியோகிக்கப்படும் பொருட்கள் யாவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைகளா?

முகவர்கள் உங்களிடத்தில் கொண்டுவரும் பொருட்களில் காணப்படும் கலவைகள் யாவும் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டவைகளா?

 இஸ்லாத்தில் விலக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்வது எவ்வாறு?

உங்களாலும் உங்கள் குழந்தைகளாலும் உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்கள் யாவும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவைகளா?

 உங்களால் பயன்படுத்தப்படும் பொருட்களில் மார்க்கம் விலக்கியிருக்கும் பதார்த்தங்கள் கலப்பதில்லை என்பது உங்களுக்கு உறுதியா?
 இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத எத்தனையோ பொருட்கள் இன்று சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

 அதிர்ச்சி தரும் இது போன்ற பல முக்கிய மற்றும் அத்தியாவசிய  விடயங்களுக்கு  ஆதாரபூர்வமான தெளிவான  விளக்கங்கள்  projector screen மூலம் HAC  உலமாக்களால் வழங்கப் பட்டன.

இந்நிகழ்வில் ஏராளமான மடவளை வாழ் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.





















மடவளையில் இன்று இடம்பெற்ற "மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகள்" தொடர்பான மாபெரும் விளக்கக் கருத்தரங்கு. மடவளையில் இன்று இடம்பெற்ற "மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகள்"  தொடர்பான  மாபெரும் விளக்கக் கருத்தரங்கு. Reviewed by Madawala News on October 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.