"JVP யின் சில கருத்து வேறுபாடுகளுடனான கொள்கைகள் NPP யின் உருவாக்கத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்தும்."



[அநுரவை ஆதரித்தல் - தொடர் - 03]

தற்போது பரவலாக ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியும்
 JVP அடிப்படையாகக் கொண்டும் NPP - தேசிய மக்கள் சக்தி மீது பல விடயங்கள் அலசப்படுகின்றது. அந்த வகையில்,

#JVPயின் முஸ்லிம்களுக்கு எதிரான  கொள்கைகள் என்று முன்வைக்கப்படுகின்ற வைகளாக.

1.முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமல் ஆக்கப்பட்டு எல்லா இனமும் ஒரே பாடசாலையில் இணைக்கப்படும். இதன் மூலம் முஸ்லிம் கலாச்சாரம் உரிமை என்பன பறிபோவதோடு அந்நிய கலாச்சாரம் மேலோங்கும்.

2.முஸ்லிம் தனியார் சட்டங்கள் அத்தனையும் நீக்கப்பட்டு நாடு முழுக்க ஒரே சட்டம் கொண்டு வரப்படும் எனவே முஸ்லிம்களுக்கான எந்த சலுகைகளும் கிடைக்கப் போவதில்லை. 

3.தனியார் நிருவனம் அரச நிருவனம் எதிலும் மத அடையாளம் இருக்க முடியாது. ஹலால் சான்றிதல் முற்றாக ஒழிக்கப்படும் இஸ்லாமியர்களுக்கான எந்த அடையாளமும் அதில் இருக்க முடியாது. துஆக்கள் மக்கா மதீனா போன்ற எந்த படமும் காட்சிப்படுத்தவும் முடியாது.

4.முகம் மூடுதல் முற்றாக தடை செய்யப்படும்.

5.அரபு மொழி பொது இடங்களில் முற்றாக தடை செய்யப்படும்.

6.18வயது எல்லை திருமண சட்டமாக கொண்டு வந்து முஸ்லிம் திருமண தனியார் சட்டம் கிழிக்கப்படும்.

7.ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் தடை செய்யப்படும்.ஆனால் விபச்சாரம் பற்றி எதுவும் செய்யாது.

8.காதி நீதிமன்றங்கள் முற்றாக ஒழிக்கப்படும் .அல்லது அரசின் பொது சட்டத்தை உள்வாங்கி அதையே நடைமுறைப்படுத்தும். இஸ்லாமிய சட்டம் புறக்கனிக்கப்படும்.

9.இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொது வெளியில் பேசவோ ,அதன் சாதகங்களை எடுத்துரைக்கவோ இஸ்லாமிய அடிப்படையில் ஒரு கொள்கை கொண்ட அரசியல் கட்சியோ நிருவ முடியாது.

10. சகல மதங்களுக்கும் ஒரு அமைச்சு நியமிக்கப்பட்டு  இஸ்லாம் பற்றி தெரியாதவர் கூட இஸ்லாமியர் விடயத்தில் தலையிட நேரிடும். அல்லது அந்த அமைச்சு ஒரு பிக்குவின் கையில் ஒப்படைக்கப்படலாம்.

குறிப்பாக மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அவதானிக்கின்ற போது  கட்சிகள் பின்பற்றுகின்ற கொள்கைகளைப் போன்று, JVP என்ற தனி ஒரு அரசியல் கட்சியும் சமத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் அக்கட்சி அல்லது அக்கட்சியின் உறுப்பினர்கள் கொள்கைகளாக இவைகளை பின்பற்றக் கூடியதாக இருக்கலாம் அல்லது அக்கட்சி உறுப்பினர்கள் இக்கொள்கைகளை மறுக்கவும் கூடும் என்பதனை நாம் மறுக்கவில்லை.

அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள NPP யானது அல்லது தேசிய மக்கள் சக்தியானது பல கொள்கைகளைப் பின்பற்றுகின்ற  JVP, NFGG போன்ற அரசியல் கட்சிகளையும், பல சிவில் அமைப்புகளையும் கொண்ட இந்த நாட்டின் மூன்றாம் சக்தியை கட்டியெழுப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பரந்த அடிப்படையிலான தேசிய வேலைத்திட்டங்களை உள்ளடக்கி செயற்படத் தயாராகியுள்ள அமைப்பாகும் என்பதே எமது விரிந்த பார்வையும் கூட.

அதேபோல் கொள்கையளவில் JVP அல்லாமல் தாராளவாத கொள்கைகளை அல்லது முதலாளித்துவ பொருளாதார அடிப்படை மாதிரிகளைப் பின்பற்றுகின்ற ஏனைய அரசியல் கட்சிகளினால் எவ்வாறு இந்த நாட்டின் மத சுதந்திரமும், அபிலாஷைகளும், நாட்டின் தேசிய வளப்பாவனைகளும்  பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்ற தர்க்க ரீதியான வினாவையும் நாம் எம்மிடம் கேட்கவேண்டியும் இருக்கிறது. ஆகவே கோட்பாடுகளுடன் கூடிய அரசியல் பங்குபற்றுதலானது இலங்கை போன்ற நாடுகளில் பெளத்த திணிப்புக் கொள்கைகளின் மேலோங்களுக்கு முன்னால் தாக்குப் பிடிக்காத என்பது நடைமுறை ரீதியிலான ஒரு புரிதலாகும்.

மேற்குறிப்பிட்ட JVP என்ற தனியான அரசியல் கட்சியானது பல கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அண்மைய அரசியல் பங்குபற்றலில் சிறுபான்மையர் சார்பா குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்கொண்ட பல இன்னல்களின் போது எமது முஸ்லீம் கட்சிகளும், முஸ்லீம் பிரதிநிதிகளும் மெளனிகளாக இருந்தவேளை சமூக நீதியின் அடிப்படையில் முஸ்லீம்களுக்காக குரல் கொடுத்தவர்கள் இந்த JVP கொள்கை சார்ந்தர்கள்தான் அதிலும் குறிப்பாக அநுர குமார வின் பங்களிப்பு அளப்பரியது என்பதனை மிகத் தெளிந்த மனதுடன் நாம் ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை JVP சார்பாக முன்வைக்கப்படும் பாதக கொள்கைகளை இனங்கண்டு அவர்களுடன் கலந்துரையாடி, ஆலோசித்து புரிந்துணர்வு அடிப்படையில் தீர்த்துக் கொள்வதற்கு தற்போதய NPP வேலைத்திட்டத்தினூடாக பல வலுவான சந்தர்ப்பங்களும் சாத்தியப்பாடுகளும் நிறையவே இருக்கின்றன.

[MLM.சுஹைல்]
"JVP யின் சில கருத்து வேறுபாடுகளுடனான கொள்கைகள் NPP யின் உருவாக்கத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்தும்." "JVP யின் சில கருத்து வேறுபாடுகளுடனான கொள்கைகள் NPP யின் உருவாக்கத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்தும்." Reviewed by Madawala News on October 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.