நேற்று வத்தளை Zuzi ஆடையக தீப்பரவலுக்கு காரணம் வெளியானது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

நேற்று வத்தளை Zuzi ஆடையக தீப்பரவலுக்கு காரணம் வெளியானது.நேற்று காலை வத்தளைப் பகுதியிலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம்
  தீப்பற்றி எரிந்து சேதமடைய மின்கசிவே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தத் தீப்பரவல் சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீடித்திருந்தது. 

சம்பவத்தின்போது தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்படுத்தப்பட்டிருந்தன.


இந்த ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலின் காரணமாக குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.


 வெள்ளிக்கிழமை காலை 6.40 மணியளவில் பரவ ஆரம்பித்த தீப்பரவல் பிற்பகல் 12.30 மணிவரை நீடித்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்களும், வெலிசர கடற்படைக்குச் சொந்தமான ஒரு தீயணைப்பு வாகனமும் இணைக்கப்பட்டிருந்தன.சுமார் ஐந்து மணித்தியாலயங்களுக்கும் அதிகமான நேரம் இந்தத் தீப்பரவல் நீடித்தமையால் குறித்த ஆடை வர்த்தக நிலையம் முழுவதும் சேதமடைந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது எனவும், இதன்போது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்டவில்லை எனவும் வத்தளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இந்தத் தீப்பரவல் காரணமாக ஆடை வர்த்தக நிலையத்தின் கட்டத்துக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.


இதனால் ஏற்பட்ட நட்டம் தொடர்பான விபரங்கள் தொடர்பிலும், சம்பவம் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் வத்தளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
நேற்று வத்தளை Zuzi ஆடையக தீப்பரவலுக்கு காரணம் வெளியானது. நேற்று வத்தளை Zuzi ஆடையக தீப்பரவலுக்கு காரணம் வெளியானது. Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5