மீனவர்கள் மூன்று நாளாகியும் வீடு திரும்பவில்லை : அதிர்ச்சியில் குடும்பங்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

மீனவர்கள் மூன்று நாளாகியும் வீடு திரும்பவில்லை : அதிர்ச்சியில் குடும்பங்கள்.


நூருள் ஹுதா உமர்.
மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று  
மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். 

சாய்ந்தமருதை சேர்ந்த  சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) , காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்த குடும்பத்தினர் அவர்களின் வருகைக்காக பெரும் அவாவுடன் காத்திருக்கின்றனர். 

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை ஆகியோருக்கும் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.
மீனவர்கள் மூன்று நாளாகியும் வீடு திரும்பவில்லை : அதிர்ச்சியில் குடும்பங்கள். மீனவர்கள் மூன்று நாளாகியும் வீடு திரும்பவில்லை : அதிர்ச்சியில் குடும்பங்கள். Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5