சற்று முன் இடம்பெற்ற ரணில் – சஜித் சந்திப்பின் விபரம்..இன்றிரவு 9:45 மணியளவில் ஆரம்பமான ரணில் – சஜித் பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

இக்கலந்துரையாடலுக்கு இரு தரப்பினதும் முக்கிய  புள்ளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியேறிய அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

எனினும் அவர் நேரடியாக பதிலளிக்காமல் “அடுத்து வரும் சில நாட்களில் இன்றைய சந்திப்பின் பலாபன்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறி சென்றார்.

உள்ளிருந்து கிடைக்கும் தகவல்களின்படி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இன்றைய பேச்சுவார்த்தை உறுதியான அல்லது தெளிவான எந்தவொரு முடிவுமின்றி முடிந்தது என்றே தெரிகிறது.

அதேவேளை,

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னர் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஜனாதிபதி நிறைவேற்று அதிகார நீக்கம் உட்பட பல விடயங்கள் குறித்து கொள்கை வகுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் முன்னர் தேர்தல் அறிவிக்கப்படவேண்டும்.

வேட்பாளர் யார் என்பதல்ல பிரச்சினை என்று   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இன்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் உறுதியாகக் கூறி உள்ளாதாக கூறியதாக கூறப்படுகிறது..

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து இறுதி முடிவெடுக்க இன்று அலரிமாளிகையில் நடந்த கூட்டம் இறுதியாக பெரியளவில்  எந்த முடிவுகளும் இன்றி முடிந்துள்ளது.

அதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹரீன் பெர்னாண்டோ,  இன்று இருவருக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது எனவும் , சஜித் ஐ.தே.க வேட்பாளராக சில நாட்களில் நியமிக்கபடுவார் எனவும் தெரிவித்தார்.

-Almashoora / Madawala  News
சற்று முன் இடம்பெற்ற ரணில் – சஜித் சந்திப்பின் விபரம்.. சற்று முன் இடம்பெற்ற ரணில் – சஜித் சந்திப்பின் விபரம்.. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5