முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வியாபாரம் செய்கின்றனர் ..முஸ்லிம் அரசியல்  தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வியாபாரம் செய்ததாக
ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

தங்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் மிக கடுமையான விமர்சனம் உள்ளது.முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை.முஸ்லிம் அரசியல் வாதிகள்  முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வியாபாரமே செய்தனர்.

முஸ்லிம் சமூகத்தினருடன் எமக்கு பாரிய கலந்துரையாடல் ஒன்று நடத்த வேண்டியுள்ளது.நாம் சந்தேகம் கொள்வதற்கு பதிலாக நாம் ஒருவருக்கொருவர் தூரமாவதற்கு பதிலாக , நாம் ஒருவதுக்கொருவர் இழிவாக்கிகொள்வதற்கு பதிலாக நாம் இணைந்து பயணிப்பதற்காக எமது கலாசாரம் மொழி பன்பாடு உள்ளிட்ட உரிமைகளை பேணி நாம் பொது சட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வியாபாரம் செய்கின்றனர் .. முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வியாபாரம் செய்கின்றனர் .. Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5