பிரதமர் ரனில் தலைமையில் இரண்டாம் கட்ட ஆட்சி மீண்டும் ஆரம்பமாகும்..நா.தினுஷா

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் கடந்து வந்துள்ள இந்த நான்கரை வருடங்களும்  எங்களின் முதல் கட்ட ஆட்சியாகும். கூட்டணிக்கான பேச்சுவாரத்தைகள் நிறைவடைந்ததும் இந்த அரசாங்த்தின் இரண்டாம் கட்ட ஆட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் மீண்டும் ஆரம்பமாகும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்தார்.

மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான  தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசாங்கத்திற்குள் எந்த முரண்பாடும் இல்லை. கட்சியில் ஜனநாயக தன்மை பேணப்படுவதாலேயே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால்  அதனை முரண்பாடாக மதிப்பிடலாகாது. புதிய கூட்டணிக்கான கலந்துரையாடல்களை நிறைவு செய்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் என்றும் இதன்போது கூறினார்.பிரதமர் ரனில் தலைமையில் இரண்டாம் கட்ட ஆட்சி மீண்டும் ஆரம்பமாகும்.. பிரதமர் ரனில் தலைமையில்  இரண்டாம் கட்ட ஆட்சி மீண்டும் ஆரம்பமாகும்.. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5