ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் யார் யார் என்று பொதுஜனப் பெரமுனக் கட்சியினர் குழப்பம் அடைந்து நாடு முழுவதும் அலைந்து திரிகின்றனர்.


-இக்பால் அலி-
ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இந்த நாட்டை சரியான முறையில் கட்டி
எழுப்பக் கூடிய தகுதியும் திறனும் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளனர்.


இவர்களைக் கண்டு கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் மஹிந்தராஜபக்ஷ ஆகியோர் குழப்பமடைந்துள்ளனர் என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் தெரிவித்தார் .


கண்டி மடுல்கலை, கலேபொக்க தமிழ்  மகா வித்தியாலயத்தில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ்  65 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய  மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத் தொகுதி , நிர்வாகக் கட்டிடம் மற்றும் அதிபர் விடுதிக் கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் வைபவம் 10  அதிபர்; எம். ஸ்ரீதரன் தலைமையில்  இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி மாவட்டப் பாரளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் பாடசாலைக் கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்து உரையாற்றும் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்று எமது நாடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்து இருக்கின்றது. இந்த் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் யார் யார் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியினர் குழப்பம் அடைந்து  நாடு முழுவதும் அலைந்து  திரிகின்றனர். பொதுஜனப் பெரமுனவின் பேட்பாளராக இருக்கக் கூடிய வேட்பாளர் கோட்டாயாப ராஜபக்கஷ மற்றும்
மஹிந்தராஜபக்க ஆகிய இருவர்களிடம்  நான் கேட்க விரும்புகின்றேன்.


ஏன் இந்தக் குழப்பம். ஏன் இவ்வாறு குழப்பம் அடைந்திருக்கின்றீர்கள். தேவையான நேரத்தில் இந்த நாட்டை சரியாக கட்டி எழுப்பக் கூடியவரை  ஐக்கிய தேசிய முன்னணி தமது ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கத் தயாராக இருக்கிறது.


இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று தலைவர்கள் இருக்கின்றார்கள். பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, உப தலைவர் சஜித் பிரேமதாச , சபாநாகயகர் கருஜயசூரிய ஆகிய மூன்று  பேரும் மிகவும் பொருத்தமான தகைமமை வாய்தவர்கள் இருக்கின்றார்கள். இந்த மூன்று பேரிலும் மிகப் பொருத்தமான தலைவரை நாங்கள் தெரிவு செய்து வேட்பாளராக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை நாங்கள் கலந்தாலோசித்து இருக்கின்றோம். ஆராய்ந்து கொண்டு இருக்கின்றோம். பொறுமையாக இருங்கள். நீங்கள் எதிர்பார்க்கின்ற அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை  தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.


மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதி மில்லியன் 71 ரூபாவாகும். இன்று அபிராமிப் பாடசாலைக்கு 65 மில்லியன் ரூபாவுக்கு அதிகமானதாகும். 2015 ஆம் ஆண்டு தேர்லுக்கு களமிறங்கிய போது என்னுடைய முதலாவது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதியாக கண்டி மாவட்டத்தில் வாழக் கூடிய தோட்டபுற எல்லாப் பகுதிகளிலும் பூரண வழங்களைக் கொண்ட பூரமாண பாடசாலையைக் கட்டி எழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று. அந்த சிந்தனையை நோக்கி  செல்வேன் என்று வாக்குறதியை அளித்தேன்  அந்த அடிப்படையிலே  கண்டி மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் அதி கூடிய தோட்டப் பகுதி மக்கள் வாழக் கூடிய பகுதியாகக் காணப்படுவது பன்விலைப் பிரதேசமாகும்.


அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையின் வேலை திட்டம் என்பது மூன்று படிமுறைகளைக் கொண்டது. அதில் முதலாவது படிமுறைதான் இங்கே வந்திருக்கிறது.  ஒரு பாடசாலையுடை அடித்தளம் வகுப்பறையாகும். வகுப்பறையைப் பூர்த்தி செய்வது இந்த திட்டத்தின் ஆரம்ப வேலையாகும். இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கணிதம் தொடர்பான கற்கை நெறி இரண்டாம் கட்டத்திலேயே வரும். அதிபர்கள் மதிப்பாக இருக்க வேண்டும். என்பதற்காக 14 மில்லியன் ரூபா செலவில்  அதிபர் விடுதி நிர்மாணித் கொடுக்கப்படுகிறது. இது அடுத்த கட்டத்துக்கு இந்தப் பாடசாலை நகர்த்துவதற்கான பணியாகும். இரண்டாம் கட்ட வேலைகளுக்கு யாருடைய வேண்டுதல்களும் இல்லாமல் இரண்டாம் கட்டத்தில் கேட்போர் கூடம் உட்பட  சகல வளங்களும் தானாகவே  வந்து சேரும்.; . இதற்கு யாரும் சிபாசு செய்ய வேண்டிய தேவை இல்லை. எல்லா வளங்களும் கிடைத்தப் பிற்பாடு இப்பாடசாலை கல்லூரியாக மாற்றம் பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


பாத்ததும்புர  ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் தொகுதி அமைப்பாளர் திலன பண்;டார தென்னகோன், முன்னாள் மத்திய மாகாண சபை தவிசாளர்  துரை மதியுகராஜா, பன்விலை  பிரதேச சபையின் தவிசாளர்  ஏ. ஜீ  செனவிரத்ன,; கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

இக்பால் அலி
10-9-201ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் யார் யார் என்று பொதுஜனப் பெரமுனக் கட்சியினர் குழப்பம் அடைந்து நாடு முழுவதும் அலைந்து திரிகின்றனர். ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் யார் யார் என்று  பொதுஜனப் பெரமுனக் கட்சியினர் குழப்பம் அடைந்து  நாடு முழுவதும் அலைந்து  திரிகின்றனர். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5