மெடிக்கல் எடுப்பதற்கு அம்பரையில் மக்கள் திண்டாட்டம்.


சாரதி அனுமதிப்பத்தித்தை புதுப்பிப்பதற்காக   மெடிக்கல்  எடுப்பதற்கு  காலை ஆறு மணிக்கு அம்பாரைக்கு
சென்றேன் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள் சுமார் 250 பேரளவில் வரிசையில் நிற்கிறார்கள்

காலையில் 8.30 மணிக்கு காரியாலயம் திறக்கப்படுகிறது 145 பேருக்கே  மெடிக்கல் கொடுக்கிறார்கள் மிகுதி பெரும் தொகையான மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப  வேண்டிய நிலை நானும் ஏமாற்றத்துடன் திரும்பினேன்

இரவு 10 மணிக்கு வந்து காத்திருப்பர்வர்களும் இருக்கின்றார்கள்
கழுவாச்சிக்குடியை சேர்ந்த ஒருவரும் வந்திருந்தார்   மட்டக்கப்புக்கு சென்று எடுக்க முடியமால் அம்பரைக்கு வந்ததாக கூறுகினார்

மக்கள் தமது தொழிலையும் விட்டு விட்டு நாள் கணக்கில் மெடிக்கல் எடுப்பதற்கு  அலைய வேண்டிய நிலையே  உள்ளது

இந்த மக்களின் அவல  நிலைக்கு உரிய தீர்வு  காணப்படல் வேண்டும்

BY:  இர்பான் 
மெடிக்கல் எடுப்பதற்கு அம்பரையில் மக்கள் திண்டாட்டம். மெடிக்கல் எடுப்பதற்கு அம்பரையில்  மக்கள் திண்டாட்டம். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5