இரு பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ..


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் இருவரை கறுவாத்தோட்டம்
 பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.


சந்தேக நபர், பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் எனவும், அவர் கொழும்பு, கறுவாத்தோட்டம் பொலிஸ் குடியிருப்பில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் .. இரு பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ..  Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5