இப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது



ஆர்.யசி
ஐக்­கிய தேசிய கட்சி குடும்ப அர­சியல் செய்யும் கட்சி அல்ல, ஜன­நா­யக கட்­சி­யாக நாம் ஆட்சி செய்­கின்ற
கார­ணத்­தினால்  எமக்கு ஆத­ரவு வழங்­கிய சகல தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தியே எமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மிப்போம்.
இம்­முறை தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னதும், முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளி­னதும் முழு­மை­யான ஆத­ரவு எமக்குக்  கிடைக்கும் என நம்பிக்கை இருக்­கின்­றது. அவர்­க­ளுடன் விரைவில் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம் என்று  ஐக்­கிய தேசிய கட்சி  தெரி­வித்­துள்­ளது. 
ஐக்­கிய தேசிய கட்­சியின் அடுத்­த­கட்ட நகர்­வுகள் சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­களை இணைத்­துக்­கொள்­வதில் ஐக்­கிய தேசிய கட்சி முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் மற்றும் பேச்­சு­வார்த்­தைகள் குறித்து வின­விய போதே கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இவற்றை கூறினர்.  
இது குறித்து கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கூறு­கையில். 
ஒவ்­வொரு முறையும் ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்பின் பின்­னரே எமது ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பதை அறி­வித்தோம். இம்­மு­றையும் நாம் அவ்­வாறே அறி­விப்போம். 
இம்­மு­றையும் சகல கட்­சி­களும் எம்­முடன் இணையும்.  தமிழ் தரப்­பினர், முஸ்லிம் கட்­சிகள் அனை­வரும் எமக்கு ஆத­ரவை வழங்­கு­வார்கள். தமிழர் தரப்­பினை நம்­பிக்­கையை வென்ற கட்­சி­யாக இன்றும் ஐக்­கிய தேசிய கட்­சியே உள்­ளது. அதே­போன்று  எமது ஆட்­சியில் தமி­ழர்­களை புறக்­க­ணித்த தனித்த பய­ணத்தை நாம் ஒரு­போதும் முன்­னெ­டுத்­த­தில்லை.
 பிர­த­ம­ராக இருந்­தாலும் எமது கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தாலும் நாமே வடக்கு கிழக்கில் சென்று மக்­களை சந்­தித்து அவர்­களின் நல்­லது கெட்­டதை எல்லாம் அறிந்­து­கொள்­கிறோம். ஆகவே குறைகள் அதி­ருப்­திகள் இருந்­தாலும் தமிழ் மக்­க­ளி­னதும் முஸ்லிம் மக்­க­ளி­னதும்  ஆத­ரவை எம்மால் பெற்­றுக்­கொள்ள முடியும்,
 தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் எம்­முடன் இணை­யாது போனாலும் தமிழ் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவை எமக்கு பெற்­றுக்­கொ­டுத்த கட்­சி­க­ளாகும். அவர்கள் இம்­மு­றையும் எமக்கு ஆத­ரவை வழங்­கு­வார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.  
மலை­யக தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் எமது அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொண்டு வேறு எந்த அர­சாங்­கமும் செய்­யாத பல வேலைத்­திட்­டங்­களை அம்­மக்­க­ளுக்­காக செய்­துள்­ளனர். ஆகவே தமிழ் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் நாம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி எமக்­கான ஆத­ரவை நாம் பெற்­றுக்­கொவோம் என்றார். 
இது குறித்து அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறு­கையில்,  
அனை­வரும் இணைந்து கட்­சியை எவ்­வாறு வெற்­றி­பெற செய்­வது என்­பது குறித்தே நாம் தொடர்ச்­சி­யாக பேசி வரு­கின்றோம். முதலில் எம்­முடன் இணைய ஆர்வம் காட்டும் சகல கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து கூட்­ட­ணியை அமைத்­து­விட்டு பின்னர் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்ற தீர்­மா­னத்தை முன்­னெ­டுப்போம் என்­பதே எமது நிலைப்­பா­டாக உள்­ளது. 
அதற்­க­மைய எம்­முடன் இணைந்து பய­ணிக்க விரும்பும் மற்றும் எமக்கு தேர்­தலில் ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் கட்­சி­களின் ஆத­ரவு எவ்­வாறு உள்­ளது என்­ப­தையே முதலில் கவ­னிக்க வேண்டும். ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்­துள்ள சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை அறிந்­து­கொள்ள வேண்டும்.  
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு போன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்­களின் ஆத­ரவில் தனித்து இயங்கும் கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை அறிந்­து­கொள்ள வேண்டும். அவர்கள் கடந்த தேர்­தல்­களில் எமக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கிய நபர்கள். ஆகவே அவர்­களின் விருப்­புகள், நிலைப்­பா­டுகள் என்ன எனது கவ­னத்­தில்­கொள்ள வேண்­டிய விட­ய­மாகும். 
ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பது ஐக்­கிய தேசிய கட்­சியின் குடும்ப பிரச்­சினை அல்ல, இது கட்­சி­யாக அடுத்து ஆட்­சியை தக்­க­வைக்க அனை­வரும் இணைந்து சிந்­தித்து முன்­ந­கர வேண்­டிய விடயம். அதில் சகல தரப்பின் விட்­டுக்­கொ­டுப்பும் ஒத்­து­ழைப்பும் புரிந்­து­ணர்வும் அவ­சி­ய­மா­கின்­றது. மாற்று அணியில் குடும்ப பிரச்­சி­னையே உள்­ளது. அவர்கள் குடும்­ப­மாக அமர்ந்து அவர்­களின் வேட்­பாளர் அண்­ணனா தம்­பியா என்­பதை தீர்­மா­னிக்க முடியும்.
 ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி இந்த நாட்டின் சகல இன மத மக்­க­ளையும் உள்­ள­டக்­கிய கட்­சி­யாகும். இங்கு அவ்­வாறு தீர்­மா­னங்கள் எடுக்க முடி­யாது. விவ­சா­யியை ஜனா­தி­ப­தி­யாக்­கிய கட்சி எமது கட்சி. ஆகவே எமக்கு வேட்­பாளர் குறித்து அதிக அக்­க­றையும் கவ­னமும் உள்­ளது.  இம்முறை தேர்தலில்  ஜனநாயகத்தை விரும்பும் சகல கட்சிகளின் ஒத்துழைப்பும் எமக்குக் கிடைக்கும். 
அதேபோல் இப்போதே  தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது. இம்முறை தேர்தலில் அனைவரதும் ஒத்துழைப்புடன் பாரிய வெற்றியை நாம் பெற்று அடுத்த அரசாங்கத்தையும் நாம் கொண்டு செல்வோம். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றார்.
இப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது இப்போதே  தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் முழுமையான ஆதரவு எமக்கு உள்ளது Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.