மனோஜ் சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற 
உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்துக்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.


மனோஜ் சிறிசேன, தென் மாகாண சபையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், கலாசார மற்றும் கலைத்துறை விவகாரம், சமூக நலன்புரி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகாரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வீடமைப்பு, மனிதவள மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனோஜ் சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.  மனோஜ் சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5