தொடர்மழையால் மலைநாட்டு பகுதிகளில் வெள்­ளப்­பெ­ருக்­கு.. மக்கள் பாதிப்பு.


நுவ­ரெ­லியா மற்றும் ஹட்டன், கொட்­ட­கலை  ஆகிய பகு­தி­களில் பெய்­து­வரும் தொடர்­மழை கார­ண­மாக 
நேற்று காலை கொட்­ட­கலை கிறிஸ்­லஸ்பாம் தோட்டப் பகு­தியில்  ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால்  5 வீடுகள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் இப்­ப­கு­தியில் உள்ள விவ­சாய நிலங்­களும் முற்­றாக அழி­வ­டைந்­துள்­ளன.

இப்­ப­கு­தியில் உள்ள ஆறு பெருக்­கெ­டுத்­ததன் கார­ண­மாக இவ் அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ள­தோடு இத்­தோட்­டத்­திற்­கான போக்­கு­வ­ரத்தும் பாதிப்புக்­குள்­ளா­கி­யுள்­ளது.

 மேற்­படி பாதிக்­கப்­பட்ட  5 குடும்­பங்­களை சேர்ந்த 22 பேர் தற்காலிகமாக உற­வி­னர்­களின் வீடு­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  இதே­வேளை, அட்டன் கொழும்பு பிர­தான வீதியில் திய­கல பகு­தியில் மரம் முறிந்து விழும் அபா­யமும் காணப்­ப­டு­வ­தாக பொலிஸார் தெரிவித்­துள்­ளனர்.

மழை­யுடன் கடும் குளிரும் நில­வு­வ­தனால் பல்­வேறு தொழில் துறைகள் முடங்கிப்போய்­யுள்­ளன. தொடர்ச்­சி­யாக பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக பல பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள்­ளன.

அத்­தோடு சில பிர­தேச பிர­தான வீதி­களில் ஒரு வழி போக்­கு­வ­ரத்­து இடம்­பெற்று வரு­கின்­றது.

பனி­மூட்­டமும் நில­வு­வதால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங் களை செலுத்துமாறு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்மழையால் மலைநாட்டு பகுதிகளில் வெள்­ளப்­பெ­ருக்­கு.. மக்கள் பாதிப்பு. தொடர்மழையால்  மலைநாட்டு பகுதிகளில் வெள்­ளப்­பெ­ருக்­கு.. மக்கள் பாதிப்பு. Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.