இவ்வாறு சென்றால் அடுத்து பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கள­மிறங்க நேரிடும்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இவ்வாறு சென்றால் அடுத்து பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கள­மிறங்க நேரிடும்..


இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட 
ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி­யிடுகிறார். இவ்வாறு சென்றால் எதிர்­காலத்தில் பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கள­மிறங்குவது தவிர்க்க முடியாததாகி­விடும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


வேளாண்மை மேற்கொள்ளும் மக்களை மையப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மற்றும் டி.பீ.விஜேதுங்க உள்ளிட்டோர் தமது பயணங்ளை ஆரம்பித்­தது ஐக்கிய தேசிய கட்சியில் தான் என்­பது குறிப்பிடத்தக்கது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2300 மில்லியன் செலவீட்டில் மக்கள் மயப்ப­டுத்தப்பட்ட மத்துகம - அளுத்கம பாதையை ஒன்றிணைக்கும் புதிய பாதை திறப்பு விழா நேற்று முன்­தினம் இடம்பெற்றது. இதில் பங்கேற்ற­போதே அமைச்சர் இவ்வாறு தெரி­வித்தார்.


இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்று­கையில்,
2015 ஆம் ஆண்டையும் விட மிக வளர்ச்சிய­டைந்த மக்கள் சேவையில் அரசாங்கம் பய­ணிக்கும்போது தான் தற்போது ஜனா­திபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்­ளது. 


கடந்த காலங்களில் நடைபெற்ற மாபெரும் மக்கள் சார்ந்த அபிவிருத்தி செயற்றிட்டங்களில் சர்வதேச ரீதியில் தற்­போதுள்ள அரசானது அங்கீகாரத்துடன் திகழ்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து விதமான நலன்களையும் கருத்திற்கொண்டு செயற்படும் எமது அரசாங்கம் நடைபெறவிருக்கும் ஜனாதி­பதி தேர்தலின் பின்னர் வரலாறு காணாத வகையில் அபிவிருத்தி பாதையில் பயணிக்கவிருக்கிறது.2015ஆம் ஆண்டு நாம் சிறந்த தீர்மானத்­திற்குள் உள்வாங்கப்பட்டு, ராஜபக் ஷவின்­அரசுக்கு எதிராக ஓர் ஒன்றிணைந்த தீர்­மானத்திற்கு தள்ளப்படுவோம். அதன் விளைவாக, ரணில் விக்கிரமசிங்க தலை­மையில் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்தோம். அத்துடன் 80ஆம் ஆண்டு­களில் நடைபெற்ற தேசிய பிரச்சினைக­ளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் ஓர் தேசிய அரசாங்கத்தினை நிர்மா­ணித்து உட்பிரவேசித்தோம். அந்த காலத்தில் பஷில் நாட்டில் இருந்து தப்பி­யிருந்தார் 


அவ்வாறு இருந்த காலத்தில் நாம் பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுத்தோம் என்பது எமது வெற்­றியின் மூலம் நிரூபணம் ஆகியிருக்­கின்றது. அந்தந்த கால கட்டத்தில் நாம் கட்­சியின் வெற்றியை விட நாட்டின் வெற்­றிக்காகவே உழைத்தோம். 


அதுவே இப்­போதுள்ள சுபிட்சம் கிடைக்கப்பெறுவ­தற்கு வாய்ப்பாக இருந்தது. பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் அரசாங்கத்திற்குள் பிரவேசிக்கும் போது அரசாங்கத்தை பல வழிகளில் உதாசீனப்படுத்தினர். இதனால் அரசாங்கம் பல சோதனைக்குள் தள்ளப்பட்டது.


குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு இயலாமையினால் தற்­பொழுது அவர்களும் ஜனாதிபதி தேர்­தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கின்றனர். அதனால் பழையவற்றை மறந்து மேலும் மஹிந்தவை பின்பற்ற தயாராகின்றனர். அவ்வகையான செயற்­றிட்டங்களை மேற்கொள்ள நல்லாட்சி அர­சுக்கு முடியாது.கடந்த அரசினால் பெறப்பட்ட கடன்களையும் மீள செலுத்திக்கொண்டே அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்ப­டுகின்றமை முக்கிய அம்சமாகும். இலவச கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் நல்லாட்சி அர­சில்தான் என்பதும் முக்கிய அம்சமாகும். 


இதனூடாகத்தான் சர்வதேசம் நம்மை ஏற்­றுக்கொண்டுள்ளது. சர்வதேசமானது எமது பிரச்சினைகளை செவ்வனே அறிந்து வைத்துள்ளது. மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு, ஸ்டென்ஸ், லென்ஸ் (கண்) என்பனவும் போதிய அளவில் இலங்கை மக்களுக்கு சேவை அடிப்படையில் வழங்குவதை­யிட்டு சுகாதாரத்துறை பெருமிதம் கொள்கிறது. அவை அனைத்தும் செய்­தது ஏழை மக்களுக்காகவே.


இவ்வாறிருக்கையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இவ்வாறு சென்றால் எதிர்காலத்தில் பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தவிர்க்கமுடியாததாகிவிடும். அவற்றை நிராகரித்து 2015ஆம் ஆண்டை விட பலம் பொருந்திய ஓர் அரசாங்கத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இவ்வாறு சென்றால் அடுத்து பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கள­மிறங்க நேரிடும்..  இவ்வாறு சென்றால் அடுத்து பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கள­மிறங்க நேரிடும்.. Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5