Dr ஷாபியின் கைது இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிகப் பெரிய கறுப்புக் கறை........ அடுக்கடுக்காக திணிக்கப் படும் அநியாயங்கள் !


சிங்கள இணையத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள். 
தமிழில் ஏ எம் எம் முஸம்மில் ( BA Hons ) – பதுளை 

           டாக்டர் ஷாபியின் வழக்கை விசாரிக்கும் குருநாகல பிரதான மாஜிஸ்ட்ரேட் நீதிவான் “சம்பத் ஹேவா வசம்” அவர்களின் மனைவியும் , குருநாகல பிரதான வைத்திய சாலையில் ஷாபிக்கு எதிராக இயங்கும் ஒரு வைத்தியராவார். 

மனைவியின் எதிரியை பழிதீர்க்க நினைத்தாரா குருநாகல் மஜிஸ்ட்ரேட் ???? 
         வைத்தியர் சேகு ஷியாப்தீன் மொகமது ஷாபி அவர்களின் வழக்கு கடந்த 11 ந் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட வேளை , அவருக்கெதிரான எந்தவொரு குற்றச் சாட்டும் இல்லாத அல்லது நிரூபிக்கப் படாத நிலையில் அவரை தடுப்புக் காவலில் வைத்துக் கொள்ள இடப்பட்டிருந்த கட்டளை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளை அவர் இனிமேலும் ஒரு சந்தேக நபர் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் .


இருந்தாலும் அவரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கும் படி கட்டளையிட்ட குருநாகல பிரதான மஜிஸ்ட்ரேட் “சம்பத் ஹேவா வசம்” அவர்களின் மனைவி ஹிரோஷனி ஜெயசின்ஹ ஹெவாவசம்  , குருநாகல வைத்திய சாலையில் ஷாபிக்கு எதிராக இயங்கும் ஒரு வைத்தியராவார்.  ஆக டாக்டர் ஷாபி மீது வஞ்சம் தீர்க்கும் தேவை இந்த வைத்தியருக்கு இருந்த காரணத்தினாலேயே தனது கனவரைவைத்து ஷாபியை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் நடவடிக்கையை மேட்கொண்டுள்ளதாக ஈ நியூஸ் சிங்கள வெப்தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. 



          இச்செயலானது வீடு செல்லும் போது தனது மனைவியை மகிழ்விக்க கணவரால் கொண்டு செல்லப் படும்   அறுசுவை உணவை போன்று இவ்வழக்கை  குருநாகல பிரதான மாஜிஸ்ட்ரேட் நீதிவான் “சம்பத் ஹேவா வசம்” கையாண்டுள்ளதாக நீதியை நேசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். 


அதுமட்டுமல்லாது இது போன்ற தெனாலிராமன் , பீர் பால் , மகாதனமுத்தா பாணியிலான பல விசித்திரமான சட்டங்களும் இந்த வழக்கில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. 
நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்த புதுமை ....


வழக்கில் ஒரு தரப்பினராக சம்பந்தப் படாத குருநாகல பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளரான சரத் வீர பண்டார எவ்வாறு நீதிமன்றத்தில் உரை நிகழ்த்த முடியும் ?????


இவ்வழக்கின் சாட்சியாளரோ , வாதியோ பிரதிவாதியோ அல்லாத குருநாகல பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளரான சரத் வீர பண்டார எனும் வைத்தியருக்கு இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்றில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இச்செயலானது சட்டத்திற்கு முரணானது என்று தெரிந்திருந்த  நீதிவான் “சம்பத் ஹேவா வசம் குறித்த வழக்கு பதிவேட்டிலிருந்து குறித்த உரை பற்றிய தகவல்களை அகற்றி விடும்படி தட்டெழுத்தாளருக்கு கட்டளையிட்டுள்ளார். இது விடயமாக குறித்த தட்டெழுத்தாளரின் வாக்கு மூலம் வெளியாகியுள்ளது.


அதுரலியே ரதன தேரோ மற்றும் குருநாகல வைத்திய சாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார ஆகியோரின் செயற்பாடுகள் மறைக்கப் பட்டமை
அடுத்த மிக முக்கிய விடயம் யாதெனில் சட்டத்திற்கு முரணாக நீதிமன்றில் கருத்துரைத்த குருநாகல வைத்திய சாலை பணிப்பாளர்  சரத் வீர பண்டார மற்றும் அதுரலியே ரதன தேரர் ஆகியோர் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக நீதிமன்றத்திட்கு உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப் பட்டிருந்தாலும் அது சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் குறித்த நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப் பட்டிருக்க வில்லை.


தமக்கு விருப்பமான தொரு வைத்தியர் குழுவை விசாரணைக் குழுவை மஜிஸ்ட்ரேட் நீதிவான்

அடுத்து மிகப் பெரிய அநீதி என்னவெனில் சுகாதார அமைச்சின் மூலம் நியமிக்கப் பட்ட விசாரனைக்குளுவை அகற்றிவிட்டு தமக்கு விருப்பமான தொரு வைத்தியர் குழுவை விசாரணைக் குழுவை மஜிஸ்ட்ரேட் நீதிவான் “சம்பத் ஹேவா வசம்” மூலம் நியமிக்கப் பட்டமையாகும். சுகாதார அமைச்சின் மூலம் நியமிக்கப் பட்ட விசாரனைக்குளுவில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ( ஸ்பெஷலிஸ்ட்)  வைத்தியர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். விசாரணைகளின் போது இக்குழுவை பற்றி எந்தவொரு விமர்சனமும் எந்த தரப்பினராலும் முன்வைக்கப் பட்டிருக்க வில்லை.  அதேவேளை புதியதொரு விசாரணைக் குழுவை நியமிக்கும் படி மஜிஸ்ட்ரேட் நீதிவானிடம் கோரிக்கை விடுக்கப் பட்டிருக்கவும் இல்லை. அதேவேளை ஏற்கனவே தயாரிக்கப் பட்ட அச்சிடப் பட்டிருந்த ஆவணம் ஒன்றின் மூலமே இது சம்பந்தமான நீதிவானின் கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது.  ஆக ஏற்கனவே இது சம்பந்தமான தீர்ப்பு தயாரிக்கப் பட்டு குறித்த தீர்ப்பை வழங்க தயாராக இருந்துள்ளதாகவே இதன் மூலம் புலப்படுகின்றது.  அவ்வாறு செய்வதற்கு ஒரு மஜிஸ்ட்ரேட் நீதிவானுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. இது வொரு பாரதூரமான விசமத்தனமான செயலாகும்.   


மேற்படி விடயங்களை ஆய்வுக்குட்படுத்தி  நீதிமன்றச் சேவைகள் ஆணைக்குழு அவசரமாக செயற்பட்டு தீர்வொன்றினை  முன்வைக்க வேண்டும்.
 
வைத்தியர் ஒருவரை சிறையிலடைத்து வைத்துக் கொண்டு ஏதாவதொரு குற்றச் செயலை செய்துள்ளாரா என்று தேடுகின்றார்கள். 
       
      இவ்வழக்கு இலங்கை நீதித் துறை வரலாற்றில் கருப்பு எழுத்துக்களால் எழுதப் பட்ட கறைபடிந்த வரலாற்றை கொண்டதாகும் . ஏனெனில் பலோப்பியன் குழாயை கைகளால் நசுக்கி, நறுக்கி  அல்லது சேதமாக்கி பெண்களை மலட்டுத் தன்மைக்குள்ளாக்காத நிலையில்  வைத்தியரின் மீது வீண் பலி சுமத்தி  அவர் மீது சேறு பூசி குடமற்ற ஒருவரை ஒரு குற்றவாளியை போல்   சிறையில் அடைத்து வைத்திருப்பதாகும். இது கொலை செய்யாத ஒருவர் மீது கொலை குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து வைத்துள்ள செயலுக்கு ஒத்த செயலாகும். வைத்தியர் ஒருவரை சிறையிலடைத்து வைத்துக் கொண்டு ஏதாவதொரு குற்றச் செயலை செய்துள்ளாரா என்று தேடுகின்றார்கள்.  விசாரணைகளை மேற்கொள்வதற்கு கூட முறையானதொரு விசாரணைக்குழு இல்லை. எவனாவது ஒருவன் அல்லது ஒரு கூட்டம் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு  ஒரு குற்றச் செயலை நிரூபணம் செய்து அதை சட்ட ரீதியாக முறைப்பாடு செய்யும் வரையில் சுதந்திரமான ஒரு மனிதன் சிறையில் அடைபட்டிருக்க வேண்டுமா ? .   

நீதித்துறையும் , காவல் துறையும் கை கோர்த்து ...........

இவ்வழக்கை பதிவு செய்த குருநாகல போலிஸ் டி ஐ ஜி கித்சிறி ஜெயலத்த்தின் மனைவியும்  குருநாகல வைத்திய சாலையில் ஒரு  வைத்தியாராவார். இவரும்  டாக்டர் சாபிக்கு எதிரானவர். இவ்வழக்கை விசாரிக்கும் குருநாகல் பிரதான மஜிஸ்ட்ரேட்டின்  மனைவியும் குருநாகல வைத்திய சாலையில் ஒரு  வைத்தியாராவார். இவரும் டாக்டர் சாபிக்கு எதிரானவராவார். இப்பெண்களின் வைராக்கியத்திற்கு பலி தீர்க்கும் வக்கிரத்திற்கு  இனவாதம்  துணையாக பின்னணியில் செயல்படுகின்றது.
ஊடகங்கள் மூலமாக மூடி மறைக்கப் பட்ட                                                                                                           

 இந்த வழக்கின் இன்னுமொரு விரிவான செய்தி .....


            குருநாகல் பிரதான வைத்திய சாலையின் சிரேஷ்ட மகப்பேற்று துறை வைத்தியர் சேகு சியாப்தீன் முஹம்மது ஷாபி அவர்களை கைது செய்து தொடர்ந்தும்  தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள இந்த செயற்பாட்டின் சில முக்கிய நிகழ்வுகளை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. மறைக்கப் பட்ட அவ்வாறான  முக்கிய விடயங்களை நீதிமன்ற செயற்பாடுகளின் போது கண்டறியப் பட்டு கீழே தரப் படுகின்றது.


குருநாகலை பிராந்திய உதவி போலிஸ் அத்தியட்சகர் கித்சிறி ஜெயலத் அவர்களுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் என்று கூறி  குருநாகல் பொலிசாரினால் 2019 மே 06 ந் திகதி வைத்தியர் ஷாபி அவர்களின் வைத்திய நிலையமொன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றது. ஆனால் அங்கே சட்டவிரோதமான அல்லது  சந்தேகத்திற்கிடமான எந்த வொன்றும் கண்டெடுக்கப் படவில்லை. 


வைத்தியர் ஷாபி அவர்களுக்கு தவ்ஹீத் ஜாமாத்துடன் தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து குருநாகலை பிராந்திய உதவி போலிஸ் அத்தியட்சகர் கித்சிறி ஜெயலத் அவர்கள் குருநாகல் பிராந்திய போலிஸ் அத்தியட்சகருக்கு  கடித இலக்கம் ඩීඅයිජී/කේයූ/ආර්අයියූ/134/19 மும் 2019 மே  12 ந் திகதியும் இடப்பட்ட கடிதமூலம் அறிவிக்கப் படுகின்றது.



குருநகல் பொலிசாரினால் 2019 மே  22 ந் திகதி, வைத்தியர் ஷாபிக்கு எதிராக விசாரணையொன்று நடைபெறுவதாக  குருநாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப் படுகின்றது,  (එහි අඩංගු කරුණු පසුව ඉදිරිපත් කරමු.)
திவையின பத்திரிகையில் 2019 மே 23 ந் திகதி ,” தவ்ஹீத் ஜமாஅத் வைத்தியர்  சிங்கள பௌத்த தாய் மார்கள் 4000 பேருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியுள்ளார். “ எனும் பிரதான  தலைப்பில் செய்தி வெளியிட்டது. இச்செய்தியில் வைத்தியரின் ஊர் பெயர் ஏதும் குறிப்பிடப் பட்டிருக்க வில்லை.  இச்செய்தியை அடிப்படையாக வைத்து இது சம்பந்தமாக விசாரணையொன்றை மேட்கொள்ளுமாறு குருநாகல் பிராந்திய பதில் போலிஸ் அத்தியட்சகர் சந்தன விக்ரமரத்ன அவர்களால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஸ்ரேஷ்ட உதவி போலிஸ் அத்தியட்சகர் ரவி செனவிரத்ன அவர்களுக்கு உத்தரவிட பட்டுள்ளது.



குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஸ்ரேஷ்ட உதவி போலிஸ் அத்தியட்சகர் மற்றும் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரால் இவ்விசாரணை , உதவி போலிஸ் அத்தியட்சகர் பி எஸ் திசேரா தலைமையிலான கூட்டுக் கொள்ளைகள் விசாரணை பிரிவுக்கு கையளிக்கப் பட்டுள்ளது.


கூட்டுக் கொள்ளைகள் விசாரணை பிரிவின் மூலம் 2019 மே 25 ந் திகதி மேற்குறித்த ,” தவ்ஹீத் ஜமாஅத் வைத்தியர்  சிங்கள பௌத்த தாய் மார்கள் 4000 பேருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியுள்ளார். “   செய்தியை திவயின பத்திரிகைக்கு பதிவு செய்த ஊடகவியலாளர் ஹேமந்த ரந்துனு மற்றும் திவயின பிரதம ஆசிரியர் ஆகியோரை போலிஸ் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.



இதற்கிடையில் கடந்த 2019 மே 24 ந் திகதி குருநாகல் பிரிவு போலிஸ் அத்தியட்சகர் மூலம் குருநாகல் போலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி புஷ்பலால் அவர்களுக்கு வைத்தியர் ஷாபியை கைது செய்யுமாறு உத்தரவிடப் படுகின்றது.


அவ்வுத்தரவின் படி கடந்த 24 ந் திகதி இரவு 10 மணிக்கு   குருநாகல் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி புஷ்பலாளின் தலைமையிலான குழுவொன்றின் மூலம் வைத்தியர் ஷாபி கைது செய்யப் படுகின்றார். 
மூன்று குற்றச் சாட்டுகளின் அடிப்படையிலேயே வைத்தியர் ஷாபி கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.


தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்திடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு , அவ்வியக்கத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கில் சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களை மலட்டுத் தன்மைக்கு உள்ளாக்கியமை.

முறை கேடான  முறையில் முதலீட்டில் ஈடுபட்டு சொத்துகளை சேர்த்துள்ளமை.


அவரை  சுதந்திரமாக நடமாட விடுவதால் அவரது உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப் படலாம் என்ற காரணத்தால் .


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப் பட்டிருந்தாலும் மேற்குறித்த விடயங்கள் சம்பந்தமாக எந்தவொரு முறையான விசாரணையும்  நடத்தப் பட்டு தகுந்த ஆதாரங்கள் முன்வைக்கப் படவில்லை. 

1979 இல  48 இன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சரத்து 7 (1) கீழ் 72 மணி நேரம் அவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யும் அனுமதியை போலிஸ் அத்தியட்சகர் டி எம் யு மஹிந்த திசாநாயக அவர்களால் குருநாகல் போலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி புஷ்பலால் அவர்களுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது.


அடுத்த நாள் , அதாவது 25 ம் திகதி வைத்தியர் ஷாபியை   கீழ் அவர் கைது செய்யப் பட்டு போலிஸ் புலனாய்வு பிரிவில் ஒப்படைக்குமாறு போலிஸ் மா அதிபரால் உத்தரவிடப் பட்டுள்ளது.


2019 மே 25 ம் திகதி திவயின பத்திரிகையில் குறித்த செய்தியை பதிவு செய்த நிருபர் ரந்துனு அப்புஹாமிலாகே ஹேமந்த அசோக ரந்துனுவை புலனாய்வு பிரிவுக்கு அழைத்து குறித்த செய்தி சம்பந்தமாக வாக்கு மூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது. “ குருநாகல் டி ஐ ஜி கித்சிறி ஜெயலத் அவர்கள் தமக்கு தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே தாம் அச்செய்தியை  திவயின பத்திரிகைக்கு  வழங்கியதாக” அவர் தம் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். 
இது சம்பந்தமாக விசாரணை செய்த புலனாய்வு துறை2019  ஜூன் 27 ந் திகதியின்   தமது B அறிக்கையில் கீழ் காணும் வகையில் அறிக்கையிட்டிருந்தது . 


“'2019.05.23  ந் திகதி திவயின பத்திரிகையில் பிரசுரமான பிரதான செய்தியான ,” தவ்ஹீத் ஜமாஅத் வைத்தியர்  சிங்கள பௌத்த தாய் மார்கள் 4000 பேருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியுள்ளார்.  அத்தாட்சிகளுடன் அம்பலத்திற்கு வந்துள்ள விடயங்கள், வைத்தியரை கைது செய்ய விரிவான விசாரணைகள் ஆரம்பம்.  “ எனும் செய்தி விடயமாக போலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்  பட்டிருப்பதாகவும் , தற்போதைக்கு பதிவு செய்யப் பட்டுள்ள வாக்குமூலங்களுக்கமைய மேற்படி செய்தித் தலைப்பிற்கான தகவல்களை குருநாகல் பிரிவின் உதவி போலிஸ் அத்தியட்சகர் ( DIG) மூலம் குறித்த ஊடகவியலாளருக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் அதில் “ மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக் கூடிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஊடகவியலாளர் ஹேமன்த ரந்துலு எனும் ஊடக வியலாளரால்  குறித்த செய்தியினை முறையாக தேடிப் பார்க்காமல் பிரசுரிக்கப் பட்டுள்ளதாகவும்  தற்போதைக்கு மேற்கொள்ளப் பட்டுவரும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.   


உதவி போலிஸ் அத்தியட்சகர் இது விடயமாக புலனாய்வு துறைக்கு தெரிவித்துள்ளதாவது , “ குறித்த ஊடக வியலாளரை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, “ முகப் புத்தக இணைய தளமொன்றில் வெளியாகி இருந்த செய்தியொன்றை அடிப்படையாக வைத்தே  இச்செய்தியை எழுதியதாகவும் , இச்செய்தியால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்ததாக அறிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவிற்கு வைத்தியர் ஷாபியை கையளித்ததன் பின்பு 2019 மே  27 ந் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தில் இதுவிடயமாக சட்ட ஆலோசனைகளை பெற்ற போலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சரத்து 9 (1) கீழ் 90 தினங்கள் வைத்தியர் சாபியை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்காக , பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவு பெறப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து குருநாகலைக்குச் சென்ற போலிஸ் புலனாய்வு பிரிவினர் , பாதிக்கப் பட்டதாக கூறப் படும் 615 பெண்களின் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள். “ அதில் ,  ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தமக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில்  அதில் 438 பேர் தாம் இம்முறைப்பாடுகளை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் தாம் மகப்பேற்றுக்காக எந்தவிதமான மேலதிக  முயற்சிகளையும் மேற்கொள்ள வில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். “ தாம் பிள்ளை பேறுக்காக முயற்சி செய்தாலும் பிள்ளை பிறக்க வில்லை என்று அதில் 147 பேர் தெரிவித்திருந்தார்கள்.
இங்கே முக்கிய விடயம் யாதெனில் . “ வைத்தியர் ஷாபி அவர்கள் தமது பலோப்பியன் நாளத்தை நசுக்கியதால் அல்லது சேதப் படுத்தியதால் தமக்கு பிள்ளை பேறு இல்லாமல் போனதென்று எவரும் முறைப்பாடு செய்திருக்க வில்லை. 
பொய்யான ஒன்பது ( 9 ) முறைப்பாடுகளை முன்னிலை படுத்திய குருநாகல் வைத்திய சாலை பணிப்பாளர் .............
குறித்த முறைப்பாடுகளில்( 11 ) முறைப்பாடுகள் குருநாகல் வைத்திய சாலை பணிப்பாளரால் முன்வைக்கப் பட்டிருந்தது . வைத்தியர் ஷாபியின் மூலம் சிறுநீர் நாளங்கள் சேதமாக்கப் பட்டிருந்தன. வைத்தியர் ஷாபியால்  குழந்தையொன்று கடத்தப் பட்டுள்ளது, வைத்தியர் ஷாபியால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பின் நோயாளியின் வயிற்றினுள் க்லோஸ் ( பஞ்சு) ஐ வைத்து தைக்கப் பட்டிருந்தது, வைத்தியர் ஷாபியினால் சிங்களத் தாய்மாருக்கு வலுக்கட்டாயமாக எல் ஆர் டி செய்யப் பட்டுள்ளது, போன்ற குற்றச் சாட்டுகள் அடங்கலாக  பதினொரு  ( 11 ) முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டிருந்தன.  ( இப் போலி குற்றச் சாட்டுகளுக்கு இனவாத ஊடகங்களில் முக்கியத்துவம் வழங்கப் பட்டு பிரச்சாரம் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்க விடயமாகும் )  குறித்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட V O G வைத்தியரினாலேயே அவர்களின் சிறுநீர் நாளங்கள் சேதமாகி இருந்தன. குறிப்பிட்ட இக்குற்றச் சாட்டுகளில்  ஒன்பது  ( 9) முறைப்பாடுகள்  பொய்யானவை என்று புலன் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது,

 தமது சிறுநீர் நாளங்கள் வெட்டுக் காயங்களுக்குள்ளானதென்று முறைப்பாடு செய்த ரூபசின்ஹ ஆரச்ச்சிலாகே சளிதா மதுமாளி ரூபசின்ஹ வின் குற்றச்சாட்டை விசாரணை செய்த புலனாய்வு துறையினருக்கு வாக்குமூலம் வழங்கிய VOG வைத்தியர் , குறித்த அறுவை சிகிச்சை வைத்தியர் ஷாபியால் மேற்கொள்ளப் படவில்லை என்றும் தம்மாலேயே அவ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் , குறித்த நோயாளி மிகவும் அசாத்திய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருவாயில் தாம் மிகவும் சிரமப்பட்டு குறித்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும்  அதன் போது தவறுதலாக குறித்த சிறுநீர் நாளங்கள் வெட்டுக் காயங்களுக்குள்ளானதென்றும் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

” என்று புலனாய்வு துறையினரால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. 
மேலும் அதிர்சிகள் இன்ஷா அல்லாஹ் நாளை தொடர்வோம் ...........................

Dr ஷாபியின் கைது இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிகப் பெரிய கறுப்புக் கறை........ அடுக்கடுக்காக திணிக்கப் படும் அநியாயங்கள் ! Dr ஷாபியின் கைது   இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிகப் பெரிய கறுப்புக் கறை........  அடுக்கடுக்காக திணிக்கப் படும் அநியாயங்கள் ! Reviewed by Madawala News on July 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.