சூப்பர் ஓவருக்கு சென்ற திரில்லான இறுதிப்போட்டி.. நியுசிலாந்தை சாய்த்து உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து.


2019 உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி இன்று புகழ்பெற்ற லண்டனின்,
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 இதுவரை உலகக்கோப்பை வெல்லாத இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதை அடுத்து, போட்டி ஆரம்பமானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

242 வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி சொற்ப ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்த நிலையிலும் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரின் அதிரடியால் 200 ஓட்டங்களை தாண்டியது.

பட்லர் ஆட்டமிழக்க,  பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஓவர்களில் இரு அணிகளுக்கும் வெற்றியா  / தோல்வியா என்ற நிலையில் ஆடி இறுதியில் இங்கிலாந்துக்கு 1 ஓவரில் 15 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டு போட்டி மேலும் சூடு பிடிக்க தொடங்கியது.

இறுதி ஓவரில் 1 பந்தில் 2 ஓட்டம் என்ற நிலையில் இங்கிலாந்து வீரர் ஒரு ஓட்டம் அடித்து ஆட்டமிழக்க இரு அணிகளும் சமமான ஓட்டத்தில் 50 ஓவர்களை நிறைவு செய்தது.

இதனால் போட்டி சுப்பர் ஓவர் நிலைக்கு சென்றது.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பட்லர் மற்றும் ஸ்டோக்சை களமிறக்க நியுசிலாந்து சார்பில் போல்ட் அந்த ஓவரை வீசினார் .  இந்நிலையில்  6 பந்துகளில் இங்கிலாந்து 15  ஓட்டங்களை அதிரடியாக  பெற்றது.

16 என்ற  வெற்றி இலக்கை நோக்கி  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி கப்தில்  மற்றும் ஜிம்மி  நேஷம் ஆகியோரை    களமிறக்க இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார்.

இதனை அடுத்து நியுசிலாந்து முதல் 4   பந்துளில் 13 ஓட்டங்களை பெற்றது. அடுத்து 2 பந்துகளில்  3 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் 1 ஓட்டம் பெறபட்டது.

இறுதி 1 பந்தில் 2 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் நியுசிலாந்து அணி 1 ஓட்டம் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.

வரலாற்றில் முதன் முறையாக இங்கிலாந்து அணி உலக சாம்பியன் ஆனது.
சூப்பர் ஓவருக்கு சென்ற திரில்லான இறுதிப்போட்டி.. நியுசிலாந்தை சாய்த்து உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து. சூப்பர் ஓவருக்கு சென்ற  திரில்லான இறுதிப்போட்டி.. நியுசிலாந்தை  சாய்த்து உலக சாம்பியன் ஆனது  இங்கிலாந்து. Reviewed by Madawala News on July 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.