வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டது.


குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபி
இன்று காலை  சுமார் 10:30 மணியளவில்  குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவர் மீதான வழக்கு விசாரணை  இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டுள்ளது .

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளதால், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டது. வைத்தியர் ஷாபி  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை  இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டது. Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5