புதுமையான முறையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.


உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 9 டொலரால்
குறைவடைந்துள்ள நிலையில், இலங்கையில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயால் மாத்திரம் குறைவடைந்ததும் டீசல் விலை குறைவடையாதமையும் புதுமையான விடயம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து சேவைகளுக்கான லங்கா ஒட்டோ டீசல் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், லங்கா ஒட்டோ டீசல் விலை குறைக்கப்படாமை நுகர்வோரை பாதிக்கும் செயற்பாடு என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அண்மைய காலங்களில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் அதிகபட்ச விலை 2013ஆம் ஆண்டு பதிவானதுடன் அப்போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலராக காணப்பட்டதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் இலங்கையில் 162 ரூபாய்கு விநியோகிக்கப்பட்டதுடன், லங்கா ஒட்டோ டீசல் 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
புதுமையான முறையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுமையான முறையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5