வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.. #நாவலப்பிட்டி


வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


நாவலபிட்டிய, ரம்புக்பிட்டிய எனம் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் நண்பரினால் நேற்று (10) மாலை 6 மணியளவில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு வேனை எடுத்த வந்து தன்னு​டைய நண்பர் போதையில் வேனில் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் போதை தெளிந்ததும் அவர் எழுந்து வருவார் எனவும் உயிரிழந்தவரிக் நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

வேனில் உறங்கியிருந்த மகன் நெடுநேரமாகியும் வராத காரணத்தினால் உயிரிழந்த நபரின் தந்தை 1990 என்ற அம்பியூலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டுள்ளதுடன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.. #நாவலப்பிட்டி வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.. #நாவலப்பிட்டி Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5