அம்பாறையில் இருந்து கொழும்பு பயணித்த பஸ்ஸில் இருந்து 150 கிலோ அமோனியா ரசாயனம் கைப்பற்றப்பட்ட சம்பவம்.


அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த தனியார் பஸ்ஸின் பின்புறப்பகுதியில்
இருந்து கைப்பற்றப்பட்ட 150 கிலோகிராம் நிறையுடைய அமோனியா ரசாயனம் யாருடைய தேவைக்காக கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை இரத்தினரிபுரி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (09) இரவு இரத்தினபுரி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த தனியார் பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, 150 கிலோ 180 கிராம் நிறையுடைய அமோனியா அடங்கிய பொதி கைப்பற்றப்பட்டது.

குறித்த பொதியின் உரிமையாளர் பஸ்ஸின் இல்லையென்றும் பஸ்ஸின் பின்புறத்தில் அதனை ஏற்றியிருந்தால் அந்த நபர் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என, பஸ்ஸின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறையில் இருந்து கொழும்பு பயணித்த பஸ்ஸில் இருந்து 150 கிலோ அமோனியா ரசாயனம் கைப்பற்றப்பட்ட சம்பவம். அம்பாறையில் இருந்து கொழும்பு பயணித்த பஸ்ஸில் இருந்து  150 கிலோ அமோனியா ரசாயனம் கைப்பற்றப்பட்ட சம்பவம். Reviewed by Madawala News on July 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.