ரணிலின் தலை­மையை எதிர்­பார்க்கும் அமெ­ரிக்கா



மிலே­னியம் சவால் நிறு­வ­னத்தின் புதிய தலைமை நிர்­வாக பணிப்­பாளர்,  சீன் கெய்ன் குரொஸ், 
பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில், பகி­ரப்­பட்ட இலக்­கு­களை நோக்கி முன்னே­று­வ­தற்கு, ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தொடர்ச்­சி­யான தலைமைத்­து­வத்தை எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

இந்தக் கடி­தத்தை பிர­தமர் செய­லகம் நேற்­று­முன்­தினம் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்­ளது.
இக் கடி­தத்தின் பிரதி, கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்­லிட்­சுக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.
அந்தக் கடி­தத்தில், “மிலே­னியம் சவால் நிறு­வ­னத்தின் தலைமை நிறை­வேற்று  அதி­கா­ரி­யாக,  உங்­களை வாழ்த்­து­வதில் மகிழ்ச்சி அடை­கிறேன்.
ஜூன் 24 ஆம் திகதி நான் பத­வி­யேற்றேன், முக்­கி­ய­மான நிறு­வனம்  மற்றும் திற­மை­யான பணி­யா­ளர்­களை வழி­ந­டத்­து­வ­தற்­காக நான் பெரு­மைப்­ப­டு­கிறேன்.
இலங்கை பொரு­ளா­தா­ரத்தில் பெரும் தடை­களை அகற்­று­வ­தற்­காக  போக்­கு­வ­ரத்து மற்றும் காணி நிர்­வாகம் தொடர்­பாக, எங்கள் அர­சாங்­கங்கள் கூட்­டாக உரு­வாக்­கிய உத்­தேச 480 மில்­லியன் டொலர் நிதி­யுவி குறித்த உடன்­பாட்டை  முன்­னேற்­று­வதில் மிலே­னியம் சவால் நிறு­வனம்  உறு­தி­யாக உள்­ளது என்­பதை உங்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­த­து­கிறேன்.
இந்த முக்­கி­ய­மான கட்­டத்தில், இந்த உடன்­பாட்டை சரி­யான நேரத்தில் முன் கொண்டு செல்­வ­தற்கு நாங்கள் ஆர்­வ­மாக உள்ளோம்.
இலங்கை மக்­க­ளுக்கு வளர்ச்­சியை ஊக்­கு­வித்தல் மற்றும் வறுமையை குறைத்தல் என்ற எங்கள் பகிரப்பட்ட இலக்கை முன்னெடுப்பதற்கான உங்கள் தொடர்ச்சியான தலைமையை நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
ரணிலின் தலை­மையை எதிர்­பார்க்கும் அமெ­ரிக்கா ரணிலின் தலை­மையை எதிர்­பார்க்கும் அமெ­ரிக்கா Reviewed by Madawala News on July 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.