மட்டகளப்பு பல்கலைகழகத்திற்கு ரத்தன தேரர் குழு விஜயம்..




தெற்காசியாவின் மிகப்பெரிய இனவாத ஸ்தலமாக மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் உள்ளதா
என்ற சந்தேகம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளனர்.

ஷரிஆ பல்கலைக்கழகத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்ட தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடமாகும்.

அத்துடன் அந்த பல்லைக்கழகம் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. அதற்கு சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெருமளவு பணம் கிடைப்பது எங்களுக்கு தெரியும்.

பங்களாதேஷ் போன்ற நாடுகள் பௌத்த துறவிகளால் நடத்தப்பட்டு வந்த நாடாகும். எனினும் தற்போது அது முழுமையான முஸ்லிம் நாடாக மாறியுள்ளது. அதனை இஸ்லாமிய அரசு என்றே கூறுகின்றனர்.

அவ்வாறே இலங்கையையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று தீவிரவாதிகள் ஆயுதத்தை விட தொழில்நுட்பத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சைபர் யுத்தமே இன்று அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே மட்டக்களப்பு ஷரிஅ பல்கலைக்கழம், இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப திறனை வழங்கும் பல்கலைக்கழமாக மாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த பல்கலைக்கழகம் முழுமையாக அரசாங்கத்திற்கு எடுத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்.

சமகாலத்தில் போர் தொழில்நுட்ப போராகவே உள்ளது. எனினும் இந்த யோசனைக்கு யாரிடம் அனுமதி பெறுவது என்பதனை பின்பு பார்ப்போம். முதலில் அதனை அரசாங்கத்திற்கு எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்காக யோசனை, சட்டமூலம் அனைத்தும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டகளப்பு பல்கலைகழகத்திற்கு ரத்தன தேரர் குழு விஜயம்.. மட்டகளப்பு பல்கலைகழகத்திற்கு ரத்தன தேரர் குழு விஜயம்.. Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.