அதிவேக வீதியின் 3ஆம் கட்ட பணிகளில் குழறுபடி: பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு



கொழும்பு – வெளிச்சுற்றுவட்ட அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்தின் நிர்மாணப்பணிகளில் ஏற்பட்டுள்ள
குழறுபடிகள் காரணமாக பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவியபோது, திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் குறித்த கொடுக்கல் வாங்கல் மூலம் இலங்கைக்கு நட்டம் ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டது.

கொழும்பு – வௌிச்சுற்றுவட்ட அதிவேக வீதியின் மூன்றாம் கட்டம் கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்யடி வரை நிர்மாணிக்கப்படுவதுடன் அதன் நீளம் 9.6 கிலோமீற்றராகும்.

இதில் அதிகளவில் கொங்கிறீட் மதில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 67 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தேவையற்ற விதத்தில் கொங்கிறீட் மதில்களின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக, பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிவேக வீதி அமைப்பதற்காக நிறுத்தப்படும் கொங்கிறீட் தூண்களின் அகலம் மற்றும் உயரம் தேவையற்ற விதத்தில் அதிகரித்துள்ளமையால் இந்த நட்டம் ஏற்படுவதை ஏற்றுக்கொள்வதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை 2016ஆம் ஆண்டு கொழும்பு – வௌிச்சுற்றுவட்ட வீதியின் மூன்றாம் கட்ட திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய சீன நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றதாக, அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும், நிர்மாணப்பணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக செலவாகும் பணத்தைக் குறைப்பதற்கு நிறுவனம் இணங்கவில்லை என, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கவேண்டி இருந்தபோதிலும் எதிர்காலத்தில் சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளும்போது இந்த விடயம் தாக்கம் செலுத்த முடியும் என்பதனால் அந்த நட்டத்தை ஈடுசெய்து கொண்டு செயற்படுவதற்கு தீர்மனித்தாக அதிகார சபை குறிப்பட்டுள்ளது.

கொழும்பு – வௌிச்சுற்றுவட்ட அதிவேக வீதியின் கடவத்தையிலிருந்து அதிகளவுதூரத்திற்கு இவ்வாறு வீதி அமைக்கப்பட்டுள்ளது.

அகலம் கூடிய மற்றும் பரப்பளவில் கூடிய கொங்கிறீட் மதில்களுக்கு மேலாக இந்த வீதி அமைக்கப்படுவதுடன், கெரவலப்பிட்டியவை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் தூண்களைப் பார்க்கும்பொழுது இந்த வேறுபாடு தௌிவாகப் புலப்படுகின்றது.

நாம் இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவரிடம் வினவியதுடன், ஆறுகள் போன்ற பாரிய நீர் நிலைகளுக்கு மத்தியில் அமைக்கப்படும் வீதிகளுக்கே, இவ்வாறான பாரிய கொங்கிறீட் மதில்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

வௌ்ளம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாரிய மரங்கள் சரிந்து வீழ்வதனால் வீதிக்கு பாதிப்பு ஏற்பட முடியும் என்பதனால் இவ்வாறான பாரிய கொங்கிறீட் மதில்கள் பயன்படுத்தப்பட்டாலும், தரைப்பகுதிக்கு இவ்வறான நிர்மாணப்பணிகள் அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, கொழும்பு – வௌிச்சுற்றுவட்ட அதிவேக வீதியின் அநாவசிய செலவீனம் காரணமாக பில்லியன் கணக்கான ரூபா மக்களின் பணமே வீண்விரயமாகியுள்ளது.

இந்த பாரிய வீண்விரயத்தை மக்களிடமிருந்து மறைப்பதற்கான காரணம் என்ன?

இதற்கு பொறுப்புவாய்ந்தவர்கள் பதிலளிக்க வேண்டும் அல்லவா?
Newsfirst-
அதிவேக வீதியின் 3ஆம் கட்ட பணிகளில் குழறுபடி: பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு அதிவேக வீதியின் 3ஆம் கட்ட பணிகளில் குழறுபடி: பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு Reviewed by Madawala News on June 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.