தவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

தவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது !குற்றவாளிக்கு  , குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது ! என ராஜாங்க அமைச்சர் ரஞ்ஞன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளர்.


அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் மேலும் கூறுகையில்,


கட்சிகளிக்கு என்று சில சட்ட திட்டங்கள் உள்ளன, அவற்றுக்கு கட்டுப்பட்டு நான் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் , வெளிநாடு சென்றும், சுகயினமுற்றும் இருந்துள்ளேன்.


வீரவன்ச கம்மன்பில போல் நான் சுயநலவாதி அல்ல .தவறிழைத்தவருக்கு  ,குற்றச்சாட்டுள்ளவருக்கு ஆதரவாக தன்னால்  கையுயர்த்த ஆதரவளிக்க  முடியாது இப்போது என்னிடம் இன்றும் கேட்க வேண்டாம் . எனது வாக்கை விருப்பத்தை நான் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

தவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது ! தவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு  ஆதரவாக கையுயர்த்த முடியாது !  Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5