(வீடியோ இணைப்பு) இராணுவ வீரர் வன்முறையாளர்களுக்கு செய்கை செய்யவில்லை.. அவரின் துப்பாக்கி 'வாரை'யே (Belt) சரி செய்தார் ;இராணுவ தளபதி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

(வீடியோ இணைப்பு) இராணுவ வீரர் வன்முறையாளர்களுக்கு செய்கை செய்யவில்லை.. அவரின் துப்பாக்கி 'வாரை'யே (Belt) சரி செய்தார் ;இராணுவ தளபதி.


13 ஆம் திகதி  புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற
வன்முறையின் போது  இராணுவ வீரர் ஒருவர் வன்முறையாளர்களுக்கு செய்கை மூலம் காட்டி தாக்க வருமாறு  சமிஞ்சை செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைகளில் பரவியது அறிந்ததே.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, குறித்த இராணுவ வீரர் குற்றம் அற்றவர் எனவும், அவர் வன்முறையாளர்களுக்கு  வரச்சொல்லி செய்கை மூலம் காட்டவில்லை எனவும், அவரின் துப்பாக்கியின்  வாரை ( Strap) சரி செய்த காட்சி தான் அது என ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் குறிப்பிட்ட வீடியோவை பலமுறை பார்த்து சோதனை செய்த நிலையில் இது இவ்வாறு உறுதி ஆகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இணைப்பு) இராணுவ வீரர் வன்முறையாளர்களுக்கு செய்கை செய்யவில்லை.. அவரின் துப்பாக்கி 'வாரை'யே (Belt) சரி செய்தார் ;இராணுவ தளபதி. (வீடியோ இணைப்பு) இராணுவ வீரர்  வன்முறையாளர்களுக்கு செய்கை செய்யவில்லை.. அவரின் துப்பாக்கி 'வாரை'யே (Belt) சரி செய்தார் ;இராணுவ தளபதி. Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5