ஜிஹாதி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கைக்கு பூரண ஆதரவு - இந்தியா உறுதி - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜிஹாதி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கைக்கு பூரண ஆதரவு - இந்தியா உறுதிநா.தனுஜா
ஜிஹாதி பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இந்தியா தனது பூரண ஆதரவை வழங்கும்
என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்திருக்கிறார்.
தலதா மாளிகைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, மல்வத்துபீட திம்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மாகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரியபீட வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து மகாநாயக்க தேரர்களிடம் வெசாக் பண்டிகை வாழ்த்தைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையும் நினைவுகூர்ந்தார்.
ஜிஹாதி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கைக்கு பூரண ஆதரவு - இந்தியா உறுதி ஜிஹாதி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கைக்கு பூரண ஆதரவு - இந்தியா உறுதி Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5