இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொடூர குண்டு வெடிப்பிற்கும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தொடர்புள்ளது என்று பரப்பபடும் செய்திக்கு கண்டனம்.


நேற்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட (8) எட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில்
இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு 500 மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இன மத வேற்பாடுகளுக்கு அப்பால் இலங்கை வாழ் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் இந்த படு மோசமான செயலை நினைக்கும் போதே இரத்த கண்ணீர் வடிக்கும் அளவுக்கு வேதனை அளிக்கிறது. மனித நேயத்தை கடுகளவும் விரும்பும் எவரும் இந்த செயலை ஆதரிக்கமாட்டார்கள்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்திருந்ததுடன், மீண்டும் ஒரு முறை இந்நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட அனைத்து சாராருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன வலிமையை வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

குறித்த குண்டு வெடிப்பு செயல் நடைபெற்றது முதல் நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்தை (NTJ) தொடர்புபடுத்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கிறது.

உண்மைத் தன்மை தெரியாவிட்டாலும்
இத்தகைய மோசமான மனிதத்தன்மைக்கு மாற்றமான செயலை யாரு செய்திருந்தாலும் எந்த அமைப்பு செய்தாலும் எந்த மதத்தை சார்ந்தவர்கள் செய்தாலும் பாரபட்சமின்றி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு கடுகளவும் மாற்றுக் கருத்தில்லை.

இவ்வாறான நிலையில் சில மீடியாக்களும், செய்தித்தளங்களும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்கிறது.

இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லது தவ்ஹீத் என்ற பெயரை இணைத்து பல அமைப்புக்கள் செயல்படுகிறது.

ஒவ்வொறு ஊர் பெயரைப் தவ்ஹீத்துடன் பயன்படுத்தி அமைப்புகள் செயல்படுகிறது.

இது போன்ற அமைப்புக்களுக்கும் தீவிரவாதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதுடன் இது போன்ற தவ்ஹீத் பெயரைப் பயன்படுத்தி
NTJ (National thawheed Jammath) என்ற ஒரு அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் பெயர் குறித்த நிகழ்வுடன் சம்பந்தப்படுத்தி பேசபடுகின்ற காரணத்தால் சிலர் புரியாமல் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) யுடன் தொடர்பு படுத்தி அவதூறு பரப்புகிறார்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பல அமைப்புக்களும் தவ்ஹீத் என்ற பெயரைப் பயன்படுத்தினாலும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கொள்கை ரீதியாவும் வேறுபட்ட கொள்கையைக் கொண்டுள்ளோம். அதே நேரம் நெஷனல் தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தைதுடன் தொடர்பில் இருந்ததும் இல்லை. அங்கம் வகித்ததுமில்லை. என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) ஆகிய நாம் நாட்டின் இறையாண்மைக்கும் அரசியல் சாசனத்திற்கும் கட்டுப்பட்டு நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு குர்ஆன்,சுன்னாவை கடைபிடிப்பதுடன், பல்வேறு சமூக சேவைகளையும் மனிதாபிமான செயல்களையும் செய்து வருவது பலருக்கும் தெரியும் குறிப்பாக உளவுத் துறைக்கும் மிகவும் தெரிந்த விடயமாகும்.

எனவே இது போன்ற மனிதாபிமானம் இல்லாத செயலுடன் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு படுத்தி செய்தி பரப்புவதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில்
மீடியாக்களும் பொதுமக்களும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வினயமாய் வேண்டிக் கொள்கிறோம்.

இப்படிக்கு
M.F.M பஸீஹ் 
செயலாளர்,
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.
-- 
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொடூர குண்டு வெடிப்பிற்கும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தொடர்புள்ளது என்று பரப்பபடும் செய்திக்கு கண்டனம். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொடூர குண்டு வெடிப்பிற்கும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தொடர்புள்ளது என்று பரப்பபடும் செய்திக்கு கண்டனம். Reviewed by Madawala News on April 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.