வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.


வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர்
உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பருத்தித்துறை ஓராம் கட்டைக்கு அண்மையில் இடம்பெற்றது.

சம்பத்தில் பருத்தித்துறை இரண்டாம் குறுக்கத்தெருவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் புவிகரன் (வயது-38) என்பவரே உயிரிழந்தார்.

மந்திகைப் பகுதியிலிருந்து வீடு திரும்பிய வேளை வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள்,  மின் கம்பத்துக்கு மோதி  விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்ற குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

விசாரணைகளின் பின்னர் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு. வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5