கும்புக்கந்துறையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் உடதலவின்னை Scorpionce அணி Champion .


கும்புக்கந்துறை Red Rose விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக 2019
ஆம் ஆண்டிற்கானகான கரப்பந்தாட்டம் Volleyball சுற்றுப்போட்டி  கும்புக்கந்துறை River Side மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இச்சுற்றுப்போட்டியில்  8 அணிகள் பங்குபற்றி இறுதி சுற்றுக்கு கும்புக்கந்துறை Red Rose அணியும் உடதலவின்னை Scorpionce  அணியும் தெரிவு செய்யப்பட்டு இறுதிச்சுற்றில் உடதலவின்னை Scorpionce அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. .


இப் போட்டிக்கு பிரதம அதிதியாக A. W. M Stores உரிமையாளர் அல் ஹாஜ் நசீர்கான் மற்றும் விஷேட  அதிதிகளாக ஜனாப் ரிஸ்மி குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் காதர் நிஜாம், மெததும்பர பிரதேச சபை உறுப்பினர் பாஸில் மற்றும் அல் ஹாஜ் ஹனீப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தகவல்
அனஸ் எம் அனீஸ்
கும்புக்கந்துறையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் உடதலவின்னை Scorpionce அணி Champion . கும்புக்கந்துறையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் உடதலவின்னை Scorpionce அணி Champion . Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5