வர்த்தகரை கடத்தி 2 கோடி மாணிக்க கல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் வீண் போகவில்லை.


ஹோமாகம பகுதியில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கல் ஒன்றுடன் நான்கு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்க விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த மாணிக்க கல்லுடன் அதன் உரிமையாளரையும் கடத்திச் சென்று 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸாரிற்கு முறைபாடு ஒன்று கிடைத்திருந்தது.

அதனடிப்படையில் பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைக்கால, ஹோமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வர்த்தகரை கடத்தி 2 கோடி மாணிக்க கல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் வீண் போகவில்லை. வர்த்தகரை கடத்தி 2 கோடி மாணிக்க கல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் வீண் போகவில்லை. Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5