இவ்வாண்டு புத்தாண்டு விபத்துக்கள் பல மடங்காக அதிகரித்தது.


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில்
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நூற்றுக்கு 8 வீதத்தினால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 413 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் 113 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6% ஆல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால்  வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 49 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22% ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் தீ விபத்து காரணமாக 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த ஒருவர் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு புத்தாண்டு விபத்துக்கள் பல மடங்காக அதிகரித்தது. இவ்வாண்டு புத்தாண்டு விபத்துக்கள் பல மடங்காக அதிகரித்தது. Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.