அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் – 2019 சிங்கள, ஹிந்து புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
 2019 ஏப்ரல் 14ம் திகதி.
இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்கள் தமது உறவுகள், நன்பர்களுடன்
இணைந்து கொண்டாடி மகிழும் இத்தருணத்தில் மலரும் சித்திரை புதுவருட பிறப்பானது சந்தோஷம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் நிரம்பிய புதிய ஆண்டாக அமைவதற்கு மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.

சிங்கள, ஹிந்து சித்திரை புத்தாண்டு பிறப்பானது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு தேசிய விழாவாக இருப்பதோடு மாத்திரமின்றி இலங்கை வாழ் மக்கள் இனம், ஜாதி, மதம் ஆகியவற்றை கடந்து, மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான பிணைப்பை,உறவுகளை மீளமைப்பதற்கான காலமாகவும் இச்சந்தர்ப்பம் காணப்படுகிறது.  

இலங்கை வாழ் மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த வருடத்தை வழியனுப்பி புது வருடத்தை வரவேற்கும் இத்தருணத்தில் நாட்டினுல் பல சாதகமான புதிய மாற்றங்களை நிகழ்த்துவதற்கும் இச்சந்தரப்பம் வழிவகுக்கும்.
நமக்கு முன்னால் உள்ள சவால்கள் மிகப்பெரியன , ஆனால் ஒரே தேசம் எனும் ஒற்றுமையுடன் நாம் எழுந்து நின்று அவற்றை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் எங்களிடம் இருப்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

நாட்டு மக்கள் ஒற்றுமையாக, ஒரு மனதுடன் புது வருட பிறப்பை கொண்டாடும் இத்தருணத்தில் இன,மத பேதங்களை தகர்த்தெரிந்து ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல நாம் உருதிகொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவள்கள் அமைச்சின் சார்பாக நான் இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களுக்கு சந்தோஷம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் நிரம்பிய புது வருடம் பிறப்பதற்கு இன்மனதுடன் வாழ்த்துகிறேன்.

அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் – 2019 சிங்கள, ஹிந்து புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் – 2019 சிங்கள, ஹிந்து புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5