ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிருக்கு சிறந்த சேவைக்கான அதிஉயர் சாதனையாளர் விருது.


(எச்.எம்.எம். பர்ஸான்)
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர், ஊடகத் துறையில் சிறந்த
பணியினைச் செய்து வருவதற்காக, சிறந்த சேவைக்கான டாக்டர் ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் ஞாபகார்த்த அதிஉயர் சாதனையாளர் விருது வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

லங்கா சாதனையாளர் மன்றம் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் கல்லூரியின் முகாமைத்துவ, தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் தலைவரும்  விஸ்வம் கல்லூரியின் தவிசாளருமான பேராசிரியர் டாக்டர் ஏ. டெக்ஸ்டர் பெர்னாண்டோ தலைமையில் கொழும்பு - 07, லக்ஷ்மன் கதிர்காமர் லைட்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ். சாஹ் மற்றும்  அதிதிகள் முன்னிலையில் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர், சிறந்த சேவைக்கான அதிஉயர் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிருக்கு சிறந்த சேவைக்கான அதிஉயர் சாதனையாளர் விருது. ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிருக்கு சிறந்த சேவைக்கான அதிஉயர் சாதனையாளர் விருது. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5