பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம் தற்போதும் சில நாடுகளில் தொடர்கிறது...


உலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின்
செயல்பாட்டில் நேற்றிரவு முதல்  பிரச்னை ஏற்பட்டது இன்னும் சில நாடுகளில் தொடர்வதாக அறிவிக்கபடுகிறது. ( இலங்கையில் சரி செய்யப்பட்டுள்ளது)



நேற்றிரவு  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் செயல்பாட்டில் பெரிய கோளாறு ஏற்பட்டது.

உலக அளவில் சமூக வலைத்தளங்கள் பயன்பாடு ஸ்தம்பித்தது.
உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் பெரிய கோளாறு ஏற்பட்டது..

வடமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை  உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியது.

பேஸ்புக்கில் புதிய பதிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் தங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறிய நிலையில்,  இன்னும் சிலர் பேஸ்புக் பக்கங்கள் திறக்கப்படவில்லை என புகார் கூறியுள்ளனர்.

இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்னை குறித்து ஆய்வு செய்வதாகவும் விரைவில் சரிசெய்யப்படும் என்று பேஸ்புக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்தப் பிரச்னை பற்றி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம் தற்போதும் சில நாடுகளில் தொடர்கிறது...  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்  தற்போதும்  சில நாடுகளில் தொடர்கிறது... Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.