வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்து.. இளவயதினர் இருவர் உயிரிழப்பு.


வெலிகந்த, பொரவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

செவனபிட்டிய பகுதியை 27 வயதுடைய  புத்திக தில்ஷான் பிரேமதாச என்பவரும்  கல்கமுவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சுபுன் தர்மபிரிய  என்பவருமே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வெலிகந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்து.. இளவயதினர் இருவர் உயிரிழப்பு.  வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்து..  இளவயதினர் இருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5