அப்டேட்... 18 மாணவர்களை தாக்கிய இக்றஹ் பாடசாலை ஆசிரியருக்கு விளக்கமறியல்.


மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்ட, பூநொச்சிமுனை இக்றஹ் வித்தியாலயத்தில், தரம் ஐந்தில்
கல்விப் பயிலும், 18 மாணவர்களை தாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ரிஸ்வான் இன்று (14)உத்தரவிட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் (14) நீதிமன்றில் முன்னிலை்படுத்தப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வீட்டுப்பாடங்களை ஒழுங்காகச் செய்துவரவில்லை என, ஆசிரியர் அவர்களை தாக்கியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த மாணவர்கள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென, காத்தான்குடி  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள், இன்று காலை (14) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சட்ட வைத்தியதிகாரியின் அறிக்கையைப் பெற அழைத்துச் செல்லப்பட்டனரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், காத்தான்குடி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரீ.எல்.ஜவ்பர்கான் Tm -
அப்டேட்... 18 மாணவர்களை தாக்கிய இக்றஹ் பாடசாலை ஆசிரியருக்கு விளக்கமறியல். அப்டேட்...  18 மாணவர்களை தாக்கிய இக்றஹ்  பாடசாலை ஆசிரியருக்கு விளக்கமறியல். Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5